முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 587 அக்டோபர் மாதம் வரை கிடைக்காது

அக்டோபர் மாதம் வரை கிடைக்காது! முடிவை அறிவித்தார் ரணில்
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஒக்டோபர் மாதம் வரை இலங்கைக்கு கடன் கிடைக்க வாய்ப்பில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும் ஏனைய நட்பு நாடுகளிடமிருந்து நிதியைப் பெறுவதற்கு முயற்சிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியானது தவறான நிர்வாகம், வரி குறைப்பு மற்றும் உரப்பிரச்சினை போன்றவற்றின் காரணமாக ஏற்பட்டது என பிரதமர் தெரிவித்தார். இருப்பினும் கொரோனா தொற்று மற்றும் ரஷ்யா – உக்ரேன் யுத்தம் காரணமாக இந்நிலைமை மிக மோசமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க ரஷ்யாவிடம் இருந்து அதிக எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு தான் தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். இதேவேளை இலங்கை தற்போது பல நாடுகளின் உதவியை நாடியுள்ள நிலையில், சீனாவிடம் இருந்து மேலும் நிதி உதவிகளை ஏற்கத் தயாராக உள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க கூறினார். உக்ரைன் நெருக்கடியின் தாக்கம் காரணமாக இவ்வருட இறுதிக்குள் உலகளவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்தார். பொருளாதார மீட்சிக்கு தேவையான திட்டங்கள் என்னவென்பதை அடையாளம் காண்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?