முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 639 புலிகளின் தலைவர் இருந்தால்?

புலிகளின் தலைவர் இருக்கும் வரை இலங்கையில் ஒரு துண்டைக்கூட விக்கவும் முடியாது எந்த நாடும் வேண்டவும் வர மாட்டார்கள் என்பதை இவன் மறந்து விட்டான்.
விடுதலைப் புலிகளின் தலைவர் இருக்கும் வரை எங்களின் நம்பிக்கை: பகிரங்கமாக அறிவித்த முக்கியஸ்தர்
பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இருக்கும் வரை எந்த ஒரு அரசியல் தீர்வு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்பதே எமது நம்பிக்கையாக இருந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அதற்கு காரணம் அவர்கள் துப்பாக்கியை வைத்துக்கொண்டே கதைத்தார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார். மூன்று இலட்சம் தமிழ் பணயக் கைதிகள் விடுதலைப் புலிகளின் தலைவர் இருக்கும் வரை எங்களின் நம்பிக்கை: பகிரங்கமாக அறிவித்த முக்கியஸ்தர் புலிகள் எப்போதுமே யுத்தத்தை பலபடுத்துவதற்காகவே சமாதானப் பேச்சுவார்த்தைகளை பயன்படுத்தினார்கள். புலிகள் சிங்கள மக்களை மட்டும் யுத்தத்தில் கொல்லவில்லை. தமிழ் தலைவர்களையும் கொலை செய்தனர். அத்துடன் மூன்று லட்சத்துக்கு மேல் தமிழ் மக்களை பணயக் கைதிகளாக வைத்திருந்தனர். அவை மனித உரிமை மீறல்கள். இன்று உயிருடன் இருக்கின்ற பன்னிரண்டாயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் கடும் கஷ்டங்களை எதிர்கொண்டு இருக்கின்றனர். அவர்கள் கல்வி கற்கவில்லை. சமூகத்தில் அவர்களுக்கு ஒரு சிறந்த அந்தஸ்து கிடைப்பதில்லை. இராணுவத்தினர் அவர்களை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வெளிநாட்டில் சிலர் விடுதலைப் புலிகளின் தலைவர் இருக்கும் வரை எங்களின் நம்பிக்கை: பகிரங்கமாக அறிவித்த முக்கியஸ்தர் சிலர் வெளிநாடு சென்று இருக்கின்றனர். ஆனால் இங்கிருக்கின்றவர்களுக்கு உரிய அந்தஸ்து கிடைப்பதில்லை. அரசியல் தீர்வு என்று பேசிக் கொண்டிருக்கின்ற தமிழ் கூட்டமைப்புக்கு இது தொடர்பில் ஒரு புரிந்துணர்வு உடன்பாடு இல்லை. இந்நிலையில் எப்படியோ இந்தியா பலவந்தமாக தலையிட்டு மாகாண சபை முறைமையை கொடுத்திருக்கிறது. அதனை எவ்வாறு கொண்டு செல்வது என்பது தொடர்பாகவே நாம் இப்போது சிந்திக்க வேண்டும். காரணம் 13 தாண்டிய எந்த ஒரு தீர்வு திட்டத்திற்கும் இலங்கையில் எந்தவிதமான இடமும் இல்லை சாத்தியமும் இல்லை அதற்கு இந்தியாவும் இடம் அளிக்காது என குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news b890

போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் ​சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.