முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 638 செய் அல்லது செத்து மடி ஒரு துளியும் கொழ்கை மாறாதே தமிழர்கள் .

பாரிசில், உணர்வுபூர்வமாக நடைபெற்ற "எழுக தமிழா" நிகழ்வு (படங்கள்)
"எழுக தமிழா" எழுச்சி நிகழ்வு இலங்கைஅரசினால், காலாகாலமாக தமிழ்மக்கள்மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இனவழிப்பிற்கு நீதிகேட்டும்,பறிக்கப்பட்டுவரும் தமிழர்களின் இறையாண்மைக்கான உரிமையை பெற்றுத்தர ஆவன செய்யக்கோரியும், திட்டமிட்டு அழிக்கப்பட்டுவரும் நமது தேசிய அடையாளங்களை நிலைநிறுத்த வேண்டியும், பிரான்ஸ் வாழ் தமிழ்த்தேசிய அமைப்புகளின் ஒன்றிணைவில் முன்னெடுக்கப்பட்ட "எழுக தமிழா" எழுச்சி நிகழ்வானது 22.06.2022, பாரிசின் République சுதந்திர சதுக்கத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினை இளையோர் தலைமையேற்று நடத்தியிருந்தமை சிறப்பான விடயமாகும். இந்நிகழ்வில் பிரான்ஸ் நகரசபைகளின் முக்கிய உறுப்பினர்கள், இனவிடுதலையை நேசிக்கும் மக்கள்,உணர்வாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 22.06.2022 மாலை மூன்று மணியளவில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில், பொதுச்சுடரினை la Courneuve நகரசபை உறுப்பினர் திருமதி.சுகுர்ணா ஸ்ரீகணேஸ் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தேசியக்கொடியேற்றல் நிகழ்வு. இதன்போது, பிரெஞ்சு தேசியக்கொடியினை Vitry sur seine நகரசபை உதவி நகரபிதா Mr. Albertino Ramaël அவர்கள் ஏற்றிவைத்தார், தொடர்ந்து எமது தேசியக்கொடிக்கீதம் காற்றலையில் ஒலிக்க, தமிழீழ தேசியக் கொடியினை திருமதி ஈழநதி அவர்கள் ஏற்றிவைத்தார். பட்டொளி வீசிப் பறந்த தேசியக்கொடியின் கீழ் மக்கள் பரவசமாய் நின்றிருந்தனர். அகவணக்கத்தினைத் தொடர்ந்து ஆரம்பமான நிகழ்வின் விளக்கவுரையினை, இளையதலைமுறையின் ஏற்பாட்டாளர் குலராஜ் நிகழ்த்த,அதனைத்தொடர்ந்து மூத்த கலைஞர்களின் பறையிசைப்பாடல் எழுச்சியுடன் இசைக்கப்பட்டது. சிறப்புரைகள்
பின்னர் உரைகள் இடம்பெற்றன. ville juif நகரசபை உறுப்பினர் Mr.Guillqme de souch, vitry sur seine நகரசபை உதவி நகரபிதா Mr.Albertino Ramaël, Bondy நகரசபை உதவி நகரபிதா திருமதி Katie, Seine saint Denis மாவட்டசபை உறுப்பினர் Oldhynn PIERRE, Bondy சபையின் உதவி நகர பிதா திருமதிCathy JANKOWSKI. Bondy மாநகர சபை உறுப்பினர் பிறேமி பிரபாகரன் போன்றோர் உரையாற்றியதுடன், பிரெஞ்சு மொழியிலான உரையினை, செல்வி. அம்மு ரஞ்சித்குமார், செல்வி.இலக்கியா எட்வேர்ட் லூயிஸ், ஆகியோரும், சிறப்புரைகளினை, தமிழ் தேசிய செயற்பாட்டாளர் பொன்.நாயகன், la Courneuve நகரசபை உறுப்பினர் திருமதி. சுகுர்ணா ஸ்ரீகணேஸ், தமிழரசன், சுதன்ராஜ், Noisy le sec நகரசபை உறுப்பினர் El hadj Mahmoudba ஆகியோரும் நிகழ்த்தினர். நிகழ்வில் கவிஞர் வன்னியூர் குரூஸ் அவர்களின் உணர்வுக் கவிதையும், மூத்த கலைஞர்களான தயாநிதி, மயிலையூர் இந்திரன், ஆகியோரின் சிறந்த வெளிப்படுத்தலில் "நாயைக்காணவில்லை" எனும் நாடகமும் நடைபெற்றன. கூடிநின்ற மக்கள்,உணர்வாளர்களின் மனமுருக சிறப்பாக அமைந்திருந்தது அந்நாடகம்.
நமது தமிழினத்தின் மேல் மேற்கொள்ளப்பட்டது திட்டமிடப்பட்ட இனவழிப்பு எனவும் ,அதற்கான நீதி கிடைக்க பிரான்ஸ் அரசாங்கம் எமக்கு உதவி புரிய வேண்டுமெனவும், மூதாதையர் வழிவந்த எமது தேசிய அடையாளங்களை அழியவிடாது பாதுகாத்து பயன்படுத்துவதற்கும் , போரில் வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளின் நிலையையும் விடுதலையையும் பெற்றுத்தருவதற்கும் மனிதாபிமான பிரான்ஸ் அரசு தமக்குஉதவி புரியவேண்டுமெனவும் "எழுக தமிழா" நிகழ்வில் தமிழ் மக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து நன்றியுரையினை குணா அவர்கள் வழங்க தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு 'நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும்' எனும் பாடலுடன் நிகழ்வு எவ்வித இடையூறுகளுமின்றி அமைதியாக நிறைவுபெற்றது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news b890

போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் ​சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.