முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 673 முஸ்லிம் பெண்களின் முகம் மறைக்கும் ஆடைக்கு தடை

முஸ்லிம் பெண்களின் முகம் மறைக்கும் ஆடைக்கு தடை ; நாட்டிலுள்ள பிரச்சினை போதவில்லையாம் பிரச்சினையை உருவாக்க தயாராகும் ஞானசார-!
இலங்கையில் தன்பாலின உறவு கொள்வதற்கு அனுமதி வழங்குதல், யுத்த குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தல், மத மாற்றத்தை தடை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, ”ஒரே நாடு – ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளது. கொழும்பு – கோட்டை பகுதியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியிடம் நேற்று (29) முற்பகல் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரினால் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டது. இலங்கையில் ”ஒரே நாடு – ஒரே சட்டம்” என்ற கருத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில், பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்று, இலங்கைக்கு தனித்துவமான கருத்தியல் கட்டமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பிலான ஆலோசனைகளை வழங்குவதற்கு ஜனாதிபதியினால், 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 மற்றும் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆகிய தேதிகளில் அதிவிசேட வர்த்தமானி ஊடாக இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டது. இந்த அறிக்கை தொழில் வல்லுநர்கள், அரசு சாரா அமைப்புக்கள், மதக் குழுக்கள், பல்வேறு இனக்குழுக்கள், பல்கலைக்கழக சமூகம் மற்றும் சட்ட வல்லுநர்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் 1,200ற்கும் அதிகமான சாட்சிகளை உள்ளடக்கிய, 43 பரிந்துரைகளுடனான 8 அத்தியாயங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் நேற்று கையளிக்கப்பட்ட நிலையில், அந்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ள பிரதான பரிந்துரைகள். இலங்கையில் தன்பாலின உறவு கொள்ளுதல் மற்றும் தனிபாலின திருமணம் ஆகியவற்றிற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தன்பாலின உறவு கொள்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு, ”ஒரே நாடு – ஒரு சட்டம்” ஜனாதிபதி செயலணி, தமது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது. எனினும், தன்பாலின திருமணத்திற்கு அனுமதி வழங்க கூடாது என பரிந்துரை செய்துள்ள ஜனாதிபதி செயலணி, அவ்வாறு தன்பாலின திருமணத்திற்கு அனுமதி வழங்கினால், அது தன்பாலின உறவுகளை ஊக்குவிக்க வலிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், யுத்த குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினர் மற்றும் ராணுவத்தினரை, உரிய புனர்வாழ்வு திட்டத்தின் கீழ், ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. யுத்த குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு தம்மால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சாதகமான பதிலை வழங்கியதாக, ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ செயலணி பரிந்துரைத்தவை என்னென்ன? 1.அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகளின் தேர்தல்களுக்கு பயன்படுத்தும் நிதி, எங்கிருந்து கிடைத்தது என்பது தொடர்பில் ஆராய்ந்து, கணக்காய்வு செய்வதற்கு புதிய சட்டமொன்று எதிர்வரும் தேர்தலுக்கு முன்னதாக உருவாக்கப்பட வேண்டும். 2. நீதிமன்ற நடவடிக்கையின் ஊடாக, குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளவர்களின் வழக்கு விசாரணைகள் நிறைவு பெறும் வரை, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சு பொறுப்புக்களை அவர்களுக்கு வழங்காத வகையில் புதிய சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும். குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்களை மக்கள் பிரதிநிதிகளாக, மக்களே தெரிவு செய்யும் பட்சத்தில், அவர்களை உறுப்பினர் பதவியில் மாத்திரம் இருக்க அனுமதி வழங்க முடியும். 3. அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் தொடர்பிலான கணக்காய்வுகளை நடத்துவதற்கு, கணக்காய்வு ஆணையாளர் நாயகத்திற்கு அதிகாரத்தை வழங்க வேண்டும். அரசியல்வாதிகளின் சொத்துக்கள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கும் காட்சிப்படுத்த அனுமதி வழங்கப்பட வேண்டும். 4. மதங்களின் சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மத மாற்று நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும். 5. தன்பாலின உறவு கொள்வது தவறு என குற்றவியல் கோவை சட்டத்தின் 365 ”அ” சரத்தில் உள்ளது. அந்த சரத்தை, குற்றவியல் கோவை சட்டத்திலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனினும், தன்பாலின திருமணத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 6. திருநங்கை சமூகத்தின் பாலினம், சமூக அந்தஸ்த்து ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளும் வகையிலான அடையாள சான்றிதழ் ஒன்றை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் திருநங்கை சமூகம், சட்டத்திற்கு அமைவாக தற்போது ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், அவர்களை ஏற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேணடும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 7. திருநங்கை சமூகத்தின் நலத்திட்டத்திற்கு, அரச தலையீட்டில் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும். 8. யுத்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள ராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலி தரப்பினரை சமூகமயப்படுத்தும், புனர்வாழ்வு திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டு, அவர்கள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும். (இந்த குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்கள், சமூகமயப்படுத்தலின் போது, சமூகத்தில் வாழக்கூடியவர்கள் என்பதை புனர்வாழ்வு நடவடிக்கைகளின் போது உறுதிப்படுத்தியதன் பின்னரே விடுவிக்க வேண்டும்) 9. நீதிமன்ற நடவடிக்கைகளை ஒளி மற்றும் ஒலி வடிவில் பதிவு செய்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். 10. மொழி, இனம் என்ற அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்ய அனுமதி வழங்கக்கூடாது. அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளின் பெயர்களை மாற்றுவதற்கு காலவகாசம் வழங்கி, கட்சிகளின் பெயர்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு கட்சிகளின் பெயர்களை மாற்றாத பட்சத்தில், கட்சியை தடை செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 11. நீதிமன்ற அவமதிப்பு குறித்த தண்டனைக்கான காலம் உள்ளிட்ட விடயங்களை நிர்ணயம் செய்யும் வகையிலான புதிய சட்டமொன்று கொண்டு வரப்பட வேண்டும். 12. கல்வி அமைச்சின் விடயதானங்களுக்கு அமைய, அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. (இலங்கையில் சில குழந்தைகள் மதம் சார்ந்த கல்வியை மாத்திரம் கற்பதை தவிர்த்து, 16 வயது வரை கல்வி அமைச்சின் விடயதானங்களுக்கு அமைய, பாடசாலை கட்டாய கல்வி அவசியம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கட்டாய கல்விக்கு மேலதிகமாக வேறு கல்விகளை கற்க முடியும்) 13. விற்பனை நிலையங்களில் ஹலால் பொருட்களுக்கு வேறு பிரிவொன்றை ஆரம்பிக்க வேண்டும். (2020ம் ஆண்டு பெப்ரவரி மாதம், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான கண்காணிப்பு குழுவொன்றினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.) 14. பொது இடங்களில் முழுமையாக முகத்தை மூடும் வகையில் ஆடை அணிவதற்கு தடை விதிக்க வேண்டும். 15. ஜாதியை வெளிப்படுத்தி, ஊடகங்களில் விளம்பரம் பிரசுரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். 16. விசேட தேவையுடையவர்களின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சட்டத்திற்கு அமைவானதாக, விசேட தேவையுடையவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டமொன்று கொண்டு வரப்பட வேண்டும். விசேட தேவையுடைவர்களுக்கான தற்போது காணப்படுகின்ற பிரத்தியேக பாடசாலைகளை தவிர்த்து, அவர்களை ஏனைய மாணவர்களுடன் கல்வி கற்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். 17. ஆதிவாசி சமூகத்தின் கலாசாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வன பாதுகாப்பு கட்டளை சட்டம் திருத்தப்பட வேண்டும். (ஆதிவாசிகள் வனப் பகுதிக்கு சென்றால், தற்போது கைது செய்வதற்கான அதிகாரம் பாதுகாப்பு பிரிவிற்கு உள்ளது). இந்த கட்டளை சட்டம் திருத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆதிவாசிகளுக்கான அதிகார சபையொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும். 18. கைதிகளுக்கான சுகாதாரம், இடவசதி, உணவு போன்ற விடயங்களை உறுதி செய்து, ஐக்கிய நாடுகள் சபையின் கைதிகள் தொடர்பிலான சட்டத்தை பின்பற்றி, சிறைச்சாலைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும். 19. தந்தை சொத்துக்களை தமது பிள்ளைகளுக்கு கையளிக்காது உயிரிழக்கும் பட்சத்தில், அந்த சொத்து மூத்த ஆண் பிள்ளைக்கு சேரும் என்ற சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்து, மூத்த பிள்ளைக்கு சொத்துக்கள் சேர வேண்டும் என்பதை உறுதிப்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 20. தனது கணவர் உயிரிழக்கும் பட்சத்தில், இஸ்லாமிய பெண்களுக்கு 4 மாதங்கள், 10 நாட்களுக்கு வழங்கப்படும் விடுமுறை தொடர்பான சட்டம் திருத்தப்பட்டு, மத வேறுபாடுகள், கணவர் அல்லது மனைவி என்ற வேறுபாடுகள் இன்றி, ஒரு மாத கால விடுமுறை வழங்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வருடமொன்றில் வழங்கப்படும் விடுமுறைகளில் இந்த விடுமுறை உள்வாங்கப்பட வேண்டும். 21. மீண்டும் இணைந்து வாழ முடியாது என இரண்டு தரப்பினரும் இணக்கம் தெரிவிப்பார்களாயின், அவர்களுக்கு விவாகரத்தை வழங்கும் வகையில் சட்டம் திருத்தப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. (தவறான நடத்தை மற்றும் பாலியல் பிரச்சினைகளுக்கு மாத்திரமே தற்போது விவாகரத்து செய்ய அனுமதிக்கப்படுகின்றது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.) 22. தேசவழமை சட்டம், முஸ்லிம் சட்டம், மலைநாட்டு சட்டம் ஆகியன முழுமையாக நீக்கப்பட்டு, பொது சட்டத்தின் கீழ், அந்த சட்டங்கள் உள்வாங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ”ஒரே நாடு – ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியினால் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சரவை, நாடாளுமன்றத்தில் சமர்பித்து, அதற்கான அனுமதிகளை பெற இணக்கம் தெரிவித்ததாக ஜனாதிபதி செயலணி தெரிவிக்கின்றது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?