யாழில் இளைஞன் திடீர் மரணம் - எரிபொருள் பெற சென்றவேளை இடம்பெற்ற கைகலப்பு காரணமா ....!
யாழில் இளைஞன் திடீர் மரணம்
யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற கைகலப்பில் காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உடுவில் செபமாலை கோவிலடியைச் சேர்ந்த செல்வரத்தினம் பிரசாந் (வயது-23) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்த இளைஞனும் , அவரது நண்பரும் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்றிருந்தனர்.
யாழில் இளைஞன் திடீர் மரணம் - எரிபொருள் பெற சென்றவேளை இடம்பெற்ற கைகலப்பு காரணமா ....!
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முறைகேடுகள்
அதன்போது , குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முறைகேடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து இருவரும் அவற்றை தமது கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த போது , எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்தவர்களுடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. முரண்பாடு முற்றிய நிலையில் இரு இளைஞர்கள் மீதும் தலைக்கவசம் உள்ளிட்டவற்றால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் இருவரும் காயமடைந்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை தாக்குதலாளிகளிடம் இருந்து காப்பாற்றி அங்கிருந்து அனுப்பி வைத்திருந்தனர். மறுநாள் திங்கட்கிழமை தாக்குதலுக்கு இலக்கான இளைஞர்களில் ஒருவர் நெஞ்சு வலி என யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். வைத்தியசாலையில் அவரை விடுதியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் புதன்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இளைஞனின் உயிரிழப்பு தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்