முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 609 பாலியில் சந்தோசத்திற்காக அதை செய்து விட்டு குழத்தையை குப்பையில் எறியும் பரிதாப நிலை.

நாய்களால் கடித்துக் குதறப்பட்ட பச்சிளம் குழந்தை: தொட்டில் குழந்தை திட்டம் என்ன மு.பிரசன்ன வெங்கடேஷ்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டங்களில் ஒன்றான தொட்டில் குழந்தை திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படாமல் முடங்கியுள்ளதால் பச்சிளம் குழந்தைகள் வீதிகள் வீசப்படும் அவலங்கள் தொடர்ந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சிசு கொலைகள் நடைபெறாத வண்ணம், உசிலம்பட்டிக்கு பல்நோக்கு துறையினர் இணைந்து சிறப்புக் கவனம் செலுத்தி உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்கிறார் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன். தொட்டில் குழந்தை திட்டம் பச்சிளம் குழந்தைகள் கைவிடப்படக் கூடாது என்ற நோக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டது. 1992ஆம் ஆண்டு முதன்முறையாக சேலத்தில் இதை அறிமுகப்படுத்தினார் ஜெயலலிதா. தமிழகம் முழுவதும் பெற்றோரால் கைவிடப்பட்ட 5 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம் காப்பகங்களில் சேர்க்கப்பட்டு, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு சட்டப்படி தத்துக் கொடுக்கப்பட்டன. தற்போதைய சூழலில் இந்த உயரிய திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. தொட்டில் குழந்தை திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்படுவதில்லை என்பது சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் குழந்தைகள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தரும் பொதுவான விளக்கம். அண்மையில் உசிலம்பட்டியில் பச்சிளம் குழந்தையின் உடல் நாய்களால் கடித்துக் குதறப்பட்டு கோரமான நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
பூவா, தலையா சொல்லி கரு பாலினத்தை வெளிப்படுத்தும் அதிர்ச்சி மையங்கள் நம் குழந்தைகளுடன் நாமும் வளர்வோம் - மூன்று பெண் குழந்தைகளை வளர்க்கும் ஒரு தாயின் அனுபவப் பகிர்வு 'காதலுக்குக் கண்கள் இல்லை' - கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2013 முதல் 2020ஆம் ஆண்டு வரை 52 குழந்தைகள் குப்பையிலும் தெரு ஓரங்களிலும் மீட்கப்பட்டன. இவற்றில் நான்கு குழந்தைகள் நாய்களும் எலிகளும் கடித்து பரிதாபமாக உயிரிழந்தன. ஒருவேளை தொட்டில் குழந்தை திட்டம் நடைமுறையில் இருந்திருந்தால் குழந்தைகள் கொல்லப்படுவது தடுக்கப்பட்டிருக்கக்கூடும் என்றும் திட்டம் மீண்டும் முழுவீச்சில் நடைமுறைக்கு வரப்படவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். பச்சிளம் குழந்தைகள் காப்பாற்றப்பட வேண்டுமெனில் முக்கிய இடங்களில் அரசின் தொட்டில்கள் ஆட வேண்டும். கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது பெரும்பாலோரின் கோரிக்கையாக உள்ளது. "தொட்டில் குழந்தை திட்டத்தைத் தற்போது செயல்படுத்துவதற்கு முதலில் சம்பந்தப்பட்ட துறையில் இருக்கக்கூடிய ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்," என்கிறார் குழந்தைகள் நல குழுமத்தின் முன்னாள் உறுப்பினர் முகமது. மேலும் இவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "தொட்டில் குழந்தை திட்டம் என்று ஒன்று இருப்பதை அரசு மறந்துவிட்டது. மக்களிடம் இதுகுறித்துப் பெரிதாக எந்தவொரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. சமூக நலத்துறை, சமூகப் பாதுகாப்புத்துறை என்ற அமைப்பு இருப்பது பெரும்பாலான கிராமப்புற மக்களுக்குத் தெரியவில்லை. குழந்தைகளை வீதியில் வீசுவதற்கு முன்பு குழந்தைகளுக்கு என்றே தனியாக அரசுத்துறை இருப்பது தெரிந்திருந்தால் குழந்தையை வீதியில் வீசுவது தவிர்க்கப்பட்டிருக்கும். சரியான முறையில் மக்களிடம் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதைச் சரியாகச் செயல்படுத்தினால் நிச்சயமாக குழந்தை இறப்புகளைத் தடுக்க முடியும்," என்றார். குழந்தையை வளர்க்க, பாதுகாக்க இயலாது என உணரும் எவருடைய குடும்பமும் தயங்காது 1098 என்ற எண்ணுக்குத் தகவல் தெரிவித்து, "குழந்தைகள் நலக் குழுமத்திடம் குழந்தையை ஒப்படைக்க வேண்டும்," என்று பிபிசி தமிழிடம் பேசியபோது கூறினார் குழந்தைகள் நலத்துறையின் முன்னாள் உறுப்பினர் குளோரி ஆனி. மேலும், "குழந்தையை வீதியில் வீசி எறியாமல் அரசிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் அந்தக் குழந்தை பாதுகாப்பான ஓர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டு, அரசு முறைப்படி தத்துக் கொடுக்கப்பட்டு, நல்லதொரு குடும்ப சூழ்நிலையில் வளரும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொது இடங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கியமாக காவல்நிலையங்களில் பதாகைகள் வைக்க வழிவகைகளைச் செய்தல் வேண்டும். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அநீதியின் விளைவாக, குழந்தைகளை ஈனுமளவுக்கு நிலைமை கைமீறிச் செல்லும் பட்சத்தில், அவர்களுக்கு சட்ட நெறிமுறைகளுடன் கூடிய மறுவாழ்வு உதவிகள் கிடைப்பதற்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் நலத்துறையுடன் அணுகி காவல்துறை ஆவண செய்ய வேண்டும். மேலும் அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடுகின்ற பொது இடங்களிலும், 'குழந்தைகளை வளர்க்க இயலாது எனில் 1098 என்ற எண் வழியாக குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்தை அணுகி குழந்தைகளை ஒப்படையுங்கள், ரகசியம் பேணப்படும். சட்டத்திற்குப் புறம்பாகத் தத்துக் கொடுத்தல், குழந்தை திருமணம் ஆகியவை தண்டனைக்கு உரிய குற்றம், போக்சோ (POCSO) வழக்கு பதியப்படும், போக்சோ வழக்கில் பிணை கிடையாது', என்ற வாசகங்கள் அடங்கிய பலகை/பதாகைகள் , போஸ்டர்கள் பொருத்துவதற்கு அரசு உத்தரவிட வேண்டும்," என்றார். தொட்டில் குழந்தை திட்டம் "1992 ஆம் ஆண்டு தொட்டில் குழந்தை திட்டம் வந்தபோது இருந்த குழந்தை பாதுகாப்பு அமைப்புகளை விடத் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளன. சமூக நலத் துறையாக இருந்தது தற்போது சமூகப் பாதுகாப்புத்துறையாக மாறியுள்ளது. இப்போதுள்ள பிரச்னை என்னவென்று பார்த்தால் பல்நோக்குத் துறை அமைப்புகளும் ஒருங்கிணைந்து வேலை செய்யாமல் இருப்பதுதான் பிரச்னை," என்கிறார் குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளரும் 'தோழமை' அமைப்பின் இயக்குநருமான தேவநேயன். மேலும் இவர், "குழந்தைகள் இந்த தேசத்தின் சொத்து. இவர்கள் எளிதில் நாசமாக்கப்படலாம். 18 வயதுக்குட்பட்ட சிறுமி அறியாத பழக்கத்தாலோ பாலியல் வல்லுறவினாலோ குழந்தையை ஈன்றால், அதற்குத் தாய் குற்றவாளி இல்லை. அந்தக் குழந்தையும் குற்றவாளி இல்லை. 1991இல் தொட்டில் குழந்தை திட்டத்தில் நிறைய குழந்தைகள் வீசப்பட்டன. தற்போது விழிப்புணர்வு காரணமாக இந்த எண்ணிகை வெகுவாகக் குறைந்துள்ளது. முறை தவறிய உறவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகத் துாக்கி வீசப்படும் குழந்தைகளை வளர்த்தெடுப்பதற்கு அமைப்பு இருப்பது பெற்றோர்கள் சமுதாயத்திற்கு முழுமையாகத் தெரியவில்லை என்பது ஒரு குறையாக உள்ளது. இதுபோல் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய் மற்றும் குழந்தையை சமூகம் தவறாகப் பேசக்கூடாது. குழந்தையைத் துாக்கி எறியும் தாய்மார்கள் கர்ப்பகால சிகிச்சை பெற்றார்களா என்பதைக் கண்டறிய வேண்டும். இதுபோன்ற குழந்தைகளுக்கு ஏதாவது பாதிப்பு இருந்தால் 1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தாய்மார்கள் பாதிக்கப்பட்டிருந்தால் 181 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சமீபகாலமாக இளம் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளது. இதுபோன்ற இளம் பெண்களுக்கு வாழ்கை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாலியல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக நலத்துறை, சமூகப் பாதுகாப்புத் துறை, சுகாதாரத் துறை, கல்வித் துறை, காவல் துறை, வருவாய்த் துறை எனப் பல துறைகளுக்குத் தொடர்புள்ளது. தொட்டில் குழந்தை திட்டம் , "இப்போதுள்ள பிரச்னை என்னவென்று பார்த்தால் பல்நோக்குத் துறை அமைப்புகளும் ஒருங்கிணைந்து வேலை செய்யாமல் இருப்பதுதான் பிரச்னை," என்கிறார் தேவநேயன் ஆனால் மேற்கண்ட இந்த பல்நோக்கு துறைகள் ஒன்றிணைந்து செயல்படுகிறதா என்று பார்த்தால் கிடையாது. மேற்கண்ட துறைகள் அனைத்தும் ஒன்றிணைந்து சீராகச் செயல்பட்டால் மட்டுமே குழந்தைகள் குப்பைத் தொட்டியில் வீசப்படும் முன்பே தடுத்து நிறுத்த முடியும்," என்றார். சிசு கொலைகள் நடைபெறாத வண்ணம், உசிலம்பட்டிக்கு பல்நோக்கு துறையினர் இணைந்து சிறப்புக் கவனம் செலுத்தி உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்கிறார் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன். மேலும் அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கிய நாள் முதல், தற்போது வரை தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருகிறது. சமூக நலத்துறையும் சுகாதாரத் துறையும் இணைந்து கிராமப் பகுதி மற்றும் நகரப் பகுதிகளில் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறார்கள். அரசு மருத்துவமனைகள், அரசு அங்கீகாரம் பெற்ற காப்பகங்களில் உள்ள தொட்டில்களில் குழந்தைகளை விட்டுச் செல்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை உசிலம்பட்டிக்குச் சிறப்பு கவனம் செலுத்தி, அங்கிருக்கும் மக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். தற்போது நடைபெற்ற இந்த துயரச் சம்பவத்தை அடுத்து இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம். சமூக நலத்துறை, சமூகப் பாதுகாப்புத் துறை, கல்வித் துறை, சுகாதாரத் துறை,காவல் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் குழந்தைகளுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என்றார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news b890

போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் ​சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.