முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 591தேர் கவிழ்ந்து விபத்து- பக்தர்கள் இருவர் பரிதாபகரமாக பல

தேர் கவிழ்ந்து விபத்து- பக்தர்கள் இருவர் பரிதாபகரமாக பலி
- பலர் காயம் தருமபுரி மாவட்டத்தில் தேர் திருவிழாவின்போது தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தேரின் அடியில் சிக்கிக்கொண்ட இரண்டு பக்தர்கள் பரிதாபகரமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த நான்கு பக்தர்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஹள்ளி கிராமத்தில், 100 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோயில் உள்ளது இந்த கோயிலுக்கு சொந்தமான 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் விழா கொண்டாடுவது வழக்கம். தேர் கவிழ்ந்து விபத்து- பக்தர்கள் இருவர் பரிதாபகரமாக பலி - பலர் காயம் (படங்கள்) இந்த கோவில் திருவிழா, ஆண்டுதோறும் சித்திரை, வைகாசி மாதங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டாண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால், திருவிழா நடைபெறவில்லை. இதனை தொடர்ந்து இந்தாண்டு காளியம்மன் தேர் திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 10-ம் திகதி கூழ் ஊற்றுதல், கரகம் எடுத்தல் நிகழ்வு நடைபெற்றது. இரண்டாம் நாளான நேற்று திருக்கல்யாணம் நிகழ்வு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, இன்று திருவிழாவின் முக்கிய நாளில், தேர் ஊர்வலம் நடைபெற்றது. 18 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தேர் திருவிழாவில் கலந்து கொண்டனர் அப்பொழுது காளியம்மன் கோவிலை சுற்றி தேர் பவனி நடைபெற்றது. அப்பொழுது வயல்வெளிகளில் தேர் வந்து கொண்டிருக்கும் போது திடீரென தேர் சக்கரத்தின் அச்சாணி முறிந்து தேர் சாய்ந்தது. தேர் கவிழ்ந்து விபத்து- பக்தர்கள் இருவர் பரிதாபகரமாக பலி - பலர் காயம் (படங்கள்) தொடர்ந்து ஏராளமான மக்கள் கூடி இருந்ததால், 30 அடி உயரமுள்ள தோ் விழுந்ததில் 6 பேர் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து கூடியிருந்த மக்கள் தேரை அப்புறப்படுத்தி, தேருக்கடியில் சிக்கியிருந்த 6 பேரை மீட்டு அம்புலன்ஸ் மூலம், தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே பாப்பாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மனோகரன், சரவணன் இருவரும் உயிரிழந்தனர். மேலும் முருகன், மாதேஷ், பெருமாள் உள்ளிட்ட நான்கு பேர் பலத்த காயங்களுடன் தருமபுாி அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAMIL Eelam news 303

 கொழும்பில் மீட்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம்! முழு விபரம் வெளியானது - பொலிஸார் பகீர் தகவல் கொழும்பு - டாம் வீதியில் பயணப் பையில் கண்டெடுக்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.. அதன்படி குறித்த சடலம் குருவிட்ட - தெப்பனாவ பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய திருமணமாகாத பெண்ணுடையது என பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும், டி.என்.ஏ பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். சி.சி.டி.வி காட்சிகள் மூலம் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் நடத்திய விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகின. அதாவது காணொளியில் காணப்படும் குறித்த நபர் பெண் ஒருவருடன் ஹங்வெல்ல பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு நடந்து செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது. எனினும், அந்த நபர் விடுதியிலிருந்து பயணப் பையுடன் வெளியேறி 143 மார்க்க ஹங்வெல்ல - புறக்கோட்டை பேருந்தில் ஏறியதாக பொலிஸார் தெரிவித்தனர். இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், ​​அந்தப் பெண் குறித்த தகவல்கள் வெளிவந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். மேலும் சந்தேகநபர் புத்தளம் ப