லண்டனிலிருந்து வந்த இளம் குடும்பபெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு (படங்கள்)
இலண்டனில் இருந்து வந்த பெண்
வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் இன்று (10.06) இரவு 7.45 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
லண்டனிலிருந்து வந்த இளம் குடும்பபெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு (படங்கள்)
குறித்த பெண்ணின் கணவரும் இரு பிள்ளைகளும் லண்டனில் வசித்து வரும் நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து வருகைதந்து வவுனியா, தோணிக்கல், ஆலடி வீதியில் வசித்துவந்த நிலையிலேயே அவரது சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம்
வீட்டில் இருந்த குறித்த பெண்ணை காணவில்லை என உறவினர்கள் தேடியபோது கிணற்றில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அப்பகுதி இளைஞர்கள், பொது மக்களின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
லண்டனிலிருந்து வந்த இளம் குடும்பபெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு (படங்கள்)
30 வயதுடைய இந்துஜா என்ற பெண்ணே இவ்வாறு மீட்கப்பட்டவராவார். அவரது சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்