ஆனால் தமிழர்களின் நாட்டையும் தமிழினத்தையும் அழித்தவர்களை பற்றி இந்தப்பிள்ளையின் தாய் தகப்பன் சொல்லி வளக்கவில்லையே. அதுதான் எமது கவலை நாடற்ற தமிழர்களிற்கு உதவுங்கள்எ ன்றுயிருந்தால் சிறப்பாயிருந்துயிருக்கும்.பிரான்ஸில் சாதித்த இலங்கை மாணவியின் நெகிழ்ச்சியான செயல்!
பிரான்ஸில் கணிதபாட தேசியமட்டத்திலான பரீட்சையில் முதலாம் இடத்தில் சித்தியடைந்து அந்த நாட்டிற்கு மேகா சந்திரகுமார் என்ற மாணவி பெருமையை சேர்ந்துள்ளார்.
அதன் காரணமாக கடந்த வியாழக்கிழமை (09/06/2022) அன்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) அவர்களின் அழைப்பு பெற்று உதவி செய்யும் நோக்கில் அவர் கேட்டபோது “உங்களது உதவி எனக்குக்கிடைத்தால் எனது குடும்பம் தான் சந்தோஷமடையும் ஆனால் தற்போது எனது நாட்டுமக்கள் உணவிற்காக கஷ்ரப்படுகிறார்கள் அவர்களுக்கு எனது பிந்தநாள் பரிசாக ஏதாவது செய்யுங்கள்” என்று கேட்டுள்ளார்.
பிரான்ஸில் சாதித்த இலங்கை மாணவியின் நெகிழ்ச்சியான செயல்!
அதற்கிணங்கி அவசர உணவுப்பொதிகள் இலங்கை மக்களுக்கு இன்றைய தினம் (14-06-2022) பிரான்ஸிலிருந்து அனுப்பபடுகிறது.
பிரான்ஸில் சாதித்த இலங்கை மாணவியின் நெகிழ்ச்சியான செயல்!
இவ்வாறு புலம்பெயர் மக்களாகிய நாம் எமது அடுத்த சந்ததிகள் மனங்களிலும் எமது நாட்டுப்பற்றை வளர்க்கவேண்டிய கட்டாயத்திலுள்ளோம் என முகநூலில் Kugan Kugaraj என்ற நபர் பதிவிட்டுள்ளார்.
மேலும் மேகா சந்திரகுமார் என்ற மாணவிக்கு முகநூலில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்