முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 623 இனக்கொலையை மறந்து கூதாடியே தமிழர்கள்

30 வருடப் போரில் எத்தனை ஆயிரம் தமிழ் பெண்களை பாலியில் வல்லுறவு செய்து துடிக்கத் துடிக்க சிங்கள வெறியர்கள் கொலை செய்தார்கள் என்பதை மறந்து எதிரியை புகழும் கூட்டம் இருக்கும்வரை எமது விடுதலை நீன்றபயணமாகவே இருக்கும்.
மன்னார், மடுவில் வயோதிப பெண்ணொருவருக்கு உதவிய இராணுவப் பெண் ஒருவரின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ் மக்களை நெகிழவைத்த இராணுவப் பெண்மணியின் செயல்! (Photos) இந்நிலையில், மக்களுக்கு உதவும் பொருட்டு LOVE WITHOUT BORDERS – Compassion Relief எனும் தொனிப்பொருளில் இலங்கையை சேர்ந்த Thalagala Sri Sriddhartha Foundation (தலகல சிறி சிறித்தார்த அறக்கட்டளை) – யுடன் Tan Ngak Buay & Kee Meng Lang Foundation Limited (Singapore) இணைந்து நாடுமுழுவதும் 63.75 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் 42,500 குடும்பங்களுக்கு உதவும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், வவுனியா 653 -ம் பிரிவு பிரிக்கேடியர் கொமாண்டர் நாமல் சேரவிங்க தலைமையில் வவுனியா மற்றும் மன்னாரை சேர்ந்த 1500 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வருகின்றனர்.
தமிழ் மக்களை நெகிழவைத்த இராணுவப் பெண்மணியின் செயல்! (Photos) இந்நிகழ்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக மன்னார், மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் கிழக்கு, மேற்கு மற்றும் சின்னப்பண்டிவிரிச்சானை சேர்ந்த கிராம சேவகர்கள் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கும், வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியதம்பனை கிராம சேவகர் பிரிவை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கும் மன்னார், மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் பகுதியிலுள்ள பெரியபண்டிவிரிச்சான் தேசிய பாடசாலையில் உலருணவு பொதிவழங்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுள்ளது.
தமிழ் மக்களை நெகிழவைத்த இராணுவப் பெண்மணியின் செயல்! (Photos) இந்நிகழ்வின் போது வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், கைக்குழந்தையுடன் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளென பலரும் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டு உலருணவுப்பொதிகள் வாங்க வருகை தந்த நிலையில், குறித்த பொதிகளை மேடைக்கு சென்று வாங்கி கைகளிலேந்திகொண்டு கீழே இறங்க மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தனர். தமிழ் மக்களை நெகிழவைத்த இராணுவப் பெண்மணியின் செயல்! (Photos) இதனை நிகழ்வின் ஆரம்பத்திலிருந்தே விளங்கிக்கொண்ட இராணுவப்பெண்மணி ஒருவர் அவர்களுக்கு உதவி வந்துகொண்டிருந்தார்.
அப்போது ஒரு வயோதிப பெண் மேடைக்கு ஏறச்சென்ற போது அவரின் செருப்பு கழன்றபோது மீண்டும் போட்டுக்கொள்ள குறித்த வயோதிபப்பெண்மணி சிரமப்பட்டுக்கொண்டிருந்தபோது, இதனை அவதானித்த குறித்த இராணுவப் பெண்மணி அந்த வயோதிபப்பெண்மணியின் செருப்பை போட்டுவிட்டு கையோடு அரவணைத்துக்கொண்டு உலருணவுப்பொதியை பெற்றுக்கொடுத்து அவருடன் வந்து பெண் மேடைக்கு அருகில் வர அவருடன் வழியனுப்பி வைத்தார். தமிழ் மக்களை நெகிழவைத்த இராணுவப் பெண்மணியின் செயல்! (Photos) குறித்த இராணுவப் பெண்மணியின் செயல் அங்கிருந்தவர்களை நெகிழச்சியடைய செய்துள்ளது. குறித்த பெண், இராணுவம் என்பதை தாண்டி, இயலாதவர்களின், ஏழைகளின் வலிகளை புரிந்துகொண்ட ஒரு பெண்ணாக வளர்ந்துள்ளார். அவர்களின் பெற்றோரால் அவ்வாறு வளர்க்கப்பட்டுள்ளார் என அங்கிருந்தவர்கள் கருத்துக்களை பகிர்ந்ததை
அவதானிக்க

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news b890

போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் ​சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.