முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 573 உன்மை என்பதற்கு அப்பால் இது ஒரு ஆய்வு.

பாலியல் உடல்நலம்: கன்னித்திரை பற்றிய உண்மையும் கட்டுக்கதைகளும்
கன்னித்தன்மை மற்றும் கன்னித்திரை என்று பலரும் குறிப்பிடும் அம்சம் பல நூற்றாண்டுகளாக கவலையின் மையமாக இருந்து வருகிறது. அதைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் ஏராளம். கன்னித்திரை என்று குறிப்பிடப்படுவது பெண்ணின் பிறப்புறுப்பில் இருக்கும் ஒரு சிறிய சவ்வு. இந்தச் சவ்வு எதற்காக இருக்கிறது என்பது குறித்து அறிவியல் உலகில் இன்றும் விவாதங்கள் உள்ளன. நமது வரலாற்றுக்கு முந்தைய பாலூட்டிகளின் வடிவங்கள் தண்ணீரிலிருந்து நிலத்திற்கு வந்தபோது ஏற்பட்ட பரிமாண மாற்றத்தில் இருந்து எஞ்சியதா? குழந்தை பருவத்தில் மலத்தில் இருந்து பாக்டீரியாக்கள் பிறப்புறுப்புக்குள் நுழையாமல் இருக்க இது உதவுகிறதா? உண்மையில் இதுபற்றி யாருக்கும் உறுதியாகத் தெரியாது. ஆனால் வெவ்வேறு உயிரினங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக இது இருக்கிறது என்பது மட்டும் உண்மை. பெண்களின் பிறப்புறுப்புக்கு மேல் இந்தச் சவ்வு மூடியிருக்கும் என்று பலர் தவறாக நம்புகிறார்கள். அப்படியிருந்தால் மாதவிடாய் வராது என்பதைக்கூட அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. உண்மையில் இந்தச் சவ்வு பிறை-சந்திரன் வடிவத்தைக் கொண்டுள்ளது. அது பலருக்கும் வெவ்வேறு தடிமன்களைக் கொண்டிருக்கலாம். விளம்பரம் வயதுக்கு ஏற்றபடி இது மாறக்கூடும். சிலருக்கு பிறக்கும்போதே இது இருக்காது. பாலியல் முதிர்ச்சி அடையும் நேரத்தில் பலருக்கு அது காணாமல் போய்விடும். உடற்பயிற்சி செய்யும்போதோ, முதல் சுய இன்பத்தின்போதோ அது கிழிந்துவிடக்கூடும். சில நேரங்களில் முதல் உடலுறவு வரை நீடித்திருக்கலாம். சிலருக்கு அதன்பிறகும்கூட இருக்கும். பாலுறவு உச்சநிலையில் எல்லாப் பெண்களும் திரவத்தை வெளியேற்றுகிறார்களா? பெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள் ஆனால் கன்னித்தன்மை பரிசோதனை என்று அழைக்கப்படும் இந்தச் சவ்வை ஆய்வு செய்வதன் மூலம் ஒரு பெண்ணின் உடலுறவு, சுய இன்பம் உள்ளிட்ட பாலியல் நடவடிக்கைகளைக் கண்டறியலாம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. எடுத்துக்காட்டாக, 2004 இல் வெளியிடப்பட்ட 36 பதின்ம வயதுக் கர்ப்பிணிகளைக் கொண்ட ஒரு சிறிய ஆய்வின் முடிவில் இரண்டு பேரிடம் மட்டுமே "உடலுறவு" நடந்திருப்பதை உறுதி செய்ய முடிந்தது. ஆனால் அவர்களும் கரப்பிணிகள் என்பது முரணாக இருந்தது. 2004-இல் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், வழக்கமாக பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபடும் 52% இளம்பெண்களுக்கு 'கன்னித்திரை' அப்படியே இருந்தது. அதனால் பாலுறவு கொண்டால் இந்தச் சவ்வு காணாமல் போகும் என்றோ, பாலுறவு கொள்ளாதவர்களுக்கு இந்தச் சவ்வு இருக்கும் என்றோ கூறுவது தவறானது. கன்னித்திரை படுக்கையில் ரத்தம் காணப்படுவது ஒருவர் கன்னித்தன்மையை இழப்பதற்கான அறிகுறி என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் ஓர் ஆய்வில், 10-இல் ஆறு பேருக்கு இது ஏற்படாது என்று தெரியவந்திருக்கிறது. அதனால் ரத்தம் வருவது இந்தச் சவ்வு கிழிவதால் வரும் என்பது உறுதியானது அல்ல. வன்புணர்வு அல்லது உயவுத் தன்மை இல்லாததன் காரணமாக ரத்தம் வரக்கூடும். முதல் முறை உடலுறவு கொள்ளும்போது பெண்ணுறுப்பில் இருந்து ரத்தப்போக்கு ஏற்படலாம், அல்லது வராமல் போகலாம். கன்னித்திரை என்று அழைக்கப்படும் சவ்வு மட்டுமே ரத்தப்போக்கு ஏற்படுவதற்குக் காரணமல்ல. பதற்றம், முழுமையாக பாலுணர்வு தூண்டப்படாமல் இருப்பது, நோய்த்தொற்று போன்றவையும் இதற்குக் காரணமாகும். ஒரு மகப்பேறு மருத்துவர் தனது சக ஊழியர்களில் 41 பேரை ஆய்வு செய்தபோது, ​அவர்களில் 63% பேர் தாங்கள் முதல்முறை உடலுறவு கொண்டபோது ரத்தம் வரவில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் கன்னித்தன்மை குறித்து பண்பாட்டில் அதிக மதிப்பு வைத்திருக்கும் நாடுகளில் படித்தவர்களிடம்கூட இந்த அறிவியல் உண்மை குறித்த புரிதல் இல்லை. 2011-ஆம் ஆண்டு துருக்கியில் உள்ள டிக்கில் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 72.1% மாணவிகளும் 74.2% மாணவர்களும் இந்தச் சவ்வு கன்னித்தன்மையின் அடையாளம் என்று நம்புவதாகத் தெரிவித்தனர். "ரத்தக் கறை படிந்த படுக்கை விரிப்பை" திருமணத்துக்கு மறுநாள் காலை குடும்பத்தினருக்குக் காட்ட வேண்டும் என்று 30.1% ஆண்கள் கூறியுள்ளனர். இது பெண்கள் பாலியல் ஆரோக்கியத்தைப் பெறுவதற்குத் தடையாக அமைகிறது. அவர்களின் பாலியல் அடையாளத்தை ஆராய்வதைத் தடுக்கிறது. அவர்களின் உடலுறவைப் பற்றிய கவலையை ஏற்படுத்துகிறது. எகிப்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் கன்னித்தன்மை பற்றிய கருத்துக்கள் காரணமாக பெரும்பாலான பெண்கள் தங்கள் திருமண இரவுக்கு முன் அச்சத்தில் இருந்ததாகக் கூறினர். 2013 ஆம் ஆண்டு லெபனானில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், கிட்டத்தட்ட 43% பெண்கள் தங்கள் திருமண இரவில் ரத்தப்போக்கு ஏற்படாது என்ற பயத்தின் காரணமாக திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ளப்போவதில்லை என்று கூறியுள்ளனர். மற்றொரு ஆய்வில் 40% பேர் கன்னித் தன்மையைப் பாதுகாக்க வாய்வழி உடலுறவு கொண்டதாக தெரிவித்தனர். கன்னித்திரை பட மூலாதாரம்,PRASHANTI ASWANI கன்னித்திரை என்ற கட்டுக்கதை பெண்களின் பாலியல் நலனையும் சமத்துவத்தையும் மட்டுமல்லாமல் நீதி பெறுவதையும் பாதிக்கிறது. நீதிமன்ற வழக்குகளில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர்களுக்கான கன்னித்தன்மை சோதனைகளை பாகிஸ்தான் சமீபத்தில் தடை செய்துள்ளது. பல நாடுகள், குறிப்பாக ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் வடக்கு மற்றும் தென் ஆப்பிரிக்காவில், இன்னும் அவற்றைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன.. இந்தியாவில் கன்னித்திரை பரிசோதனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு ஹரியாணா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில், 'இரு விரல் பரிசோதனை' எனப்படும் இந்தப் பரிசோதனை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமை, உடல், மன ஒருமைப்பாடு மற்றும் கண்ணியத்திற்கான உரிமையை மீறுவதாக உள்ளது," என்று கூறப்பட்டுள்ளது. 'இரண்டு விரல் பரிசோதனை' மற்றும் கன்னித்தன்மை பரிசோதனைகள் மூலம் வன்முறையின்றி உறவு கொண்டார்கள் என்பதை உறுதிபட குறிப்பிட முடியாது என ஆராய்ச்சியாளர்களும் மருத்துவ நிபுணர்களும் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளனர். கன்னித்திரை கிழிந்தோ சேர்ந்தோ இருப்பதை மட்டும் வைத்து இதில் முடிவெடுக்க முடியாது. அதற்கும் பாலியல் வன்முறை அல்லது துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைக்கும் தொடர்பு இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆயினும் உலகெங்கிலும் உள்ள பல மருத்துவர்கள், திருமணத்திற்கு முன் உடலுறவு கொண்ட பெண்களுக்கு 'கன்னித் திரை' பழுதுபார்ப்பதை ஓர் அறுவைச் சிகிச்சையாக வழங்குகிறார்கள். இதைச் செய்யும் மருத்துவர்கள் பிரிட்டனிலும் இருக்கிறார்கள். ஆன்லைனிலும் இந்தச் சவ்வை சரி செய்வதற்கான விளம்பரங்களும் பரப்புரைகளும் காணக்கிடக்கின்றன. கன்னித்திரை பற்றிய கருத்துக்கள் பல தலைமுறைகளாகப் புகுத்தப்பட்டிருக்கின்றன. இந்த நிலையை மாற்றுவதற்கு மேற்சொன்ன ஆராய்ச்சிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது முதல்படியாக இருக்கும். கன்னித்தன்மை சோதனைகள், அறுவைச் சிகிச்சைகள் செய்யும் மருத்துவர்களைத் தடுப்பதும் அவசியம்
ஆணுறுப்பின் தலைப்பகுதி பெண் உறுப்புக்குள் போகக்கூடாது என்பதற்காக இயற்கையால் உருவாக்கப்பட்டதே இந்தக்கண்ணித்திரை இது குழந்தைபருவத்தில் கருத்தரிக்காமல் இருப்பதற்கும் தேவையற்ற பெரிய பொருட்கள் உள்ளே செல்லாமல் இருப்பதற்கான பாதுகாப்புச் சுவர் என ஆதிகால தமிழர்களால் அளைக்கப்பட்டது. இது எந்தவிதமான உடற்பயிற்சி செய்தாலோ அல்லது கையால் அதை உடைக்கவோ எவராலும் முடியாது அது பெண்கள் வயசாக வயசாக அதின் பலம் கூடிக்கோண்டோ போகும். அதை உடைப்பதற்கான ஒரே வளி ஆண் உறுப்புதலை போன்ற ஒரு பொருளை வடிவமைத்து அதை உள்ளே விட்டால் கடுமையான வலியுடன் அது உடைந்து இரத்தம் வெளியே செல்லும். இதுதான் உன்மை மேல் உள்ள கட்டுரையில் எந்த உன்மையும் இல்லை இது நூற்றுக்கு மேற்றப்பட்ட ஆதிகால பெண்களிடம் செய்யப்பட்ட ஆய்வு.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAMIL Eelam news 303

 கொழும்பில் மீட்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம்! முழு விபரம் வெளியானது - பொலிஸார் பகீர் தகவல் கொழும்பு - டாம் வீதியில் பயணப் பையில் கண்டெடுக்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.. அதன்படி குறித்த சடலம் குருவிட்ட - தெப்பனாவ பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய திருமணமாகாத பெண்ணுடையது என பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும், டி.என்.ஏ பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். சி.சி.டி.வி காட்சிகள் மூலம் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் நடத்திய விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகின. அதாவது காணொளியில் காணப்படும் குறித்த நபர் பெண் ஒருவருடன் ஹங்வெல்ல பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு நடந்து செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது. எனினும், அந்த நபர் விடுதியிலிருந்து பயணப் பையுடன் வெளியேறி 143 மார்க்க ஹங்வெல்ல - புறக்கோட்டை பேருந்தில் ஏறியதாக பொலிஸார் தெரிவித்தனர். இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், ​​அந்தப் பெண் குறித்த தகவல்கள் வெளிவந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். மேலும் சந்தேகநபர் புத்தளம் ப