முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam newsb457

புலம்பெயர் தமிழர்களின் புத்திசாதுரியத்தை புரிந்து கொண்டாரா இலங்கை ஜனாதிபதி?
புலம் பெயர் தமிழர்களைப் புலிகள் என்றும், புலிகளின் நிழல்கள் என்றும் சிங்கள ஆட்சியாளர்கள் அலட்சியப்படுத்தி வந்தார்கள். குறிப்பாக மகிந்த ராஜபக்ச தலைமையிலான கட்சியினர் இவ்விடயத்தில் கூர்மையாக இருந்தனர். ஆனால் நல்லாட்சிக் காலத்தில் புலம்பெயர் தமிழர்களை வெறுக்காமல் அவர்களுடனும் பேச வேண்டும் என்ற உண்மையை ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டார்கள். ஆனால் பிரதமர் மகிந்த தரப்பினர் அவர்களில் பலரையும், பல அமைப்புகளையும் தடை செய்வதில் அக்கறை காட்டினர் என கட்டுரையாளர் ஜி. ஸ்ரீநேசன் (முன்னாள் நா.உ , மட்டக்களப்பு) தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது கட்டுரையில் மேலும் குறிப்பிடுகையில், ஆனால் இவ்வாறு தடை செய்யப்பட்டவர்கள் புலம் பெயர் நாடுகளில் பயந்து பணிந்து கொண்டிருக்காமல் தமது புத்திசாதுரியமான நகர்த்தல்களை பல்வேறு நாடுகளிலும் மக்கள் எழுச்சியுடன் மேற்கொண்டு வந்தனர். இதனால் அவர்களது பலம் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைப் பேரவை வரை ஊடுருவியது. இலங்கை ஆட்சியாளர்களுக்கு அவர்கள் வேண்டத்தகாதவர்களாகத் தீண்டத்தகாதவர்களாக இருந்தாலும் மேற்குலக ஜனநாயக நாடுகளில் புலம்பெயர் தமிழர்களின் ஜனநாயக வழியான செயற்பாடுகளுக்கு மதிப்பும், மரியாதையும் கணிசமான அளவு காணப்பட்டது. இறுதி யுத்தத்தின் போது இனப்படுகொலை நடைபெற்றது என்பதை நோக்கிப் புலம்பெயர் தமிழர்களின் நகர்வுகள் படிப்படியாகப் பலம் சேர்க்கும் விதத்தில் அமைந்து கொண்டிருக்கின்றன. அதற்கான வழிமுறைகளை நோக்கி புத்திசாதுரியமாக அவர்கள் செயற்பட்டுக் கொண்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையைப் புலத்திலுள்ள உறவுகள் போராட்டங்கள் மூலமாக முன்னெடுக்கும் அதேவேளைப் புலம் பெயர் தமிழ் உறவுகள் அதற்கான சர்வதேச முன்னெடுப்புகளை மனிதவுரிமை மீறல் என்ற வகையிலும் இனப்படுகொலை என்ற வகையிலும் நகர்த்தல்களைச் செய்து வருகின்றனர். இந்த தாற்பரியத்தை தற்போது விடாக்கண்டர் கொடாக்கண்டர்களாக இருந்த இலங்கை ஆட்சியாளர்கள் உணரத் தலைப்பட்டுள்ளனர். இந்த நாட்டில் இடம் பெற்ற இனப்படுகொலைகளால் புலம்பெயர்ந்து பல நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்த தமிழ் மக்கள் மேற்குலக அரசியல்களின் பங்காளர்களாகவும் மாறியுள்ளனர். நோர்வே, கனடா, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பிரதான அரசியல் கட்சிகளுடன் பலமான தொடர்புகளை ஏற்படுத்தி கெளரவமாக வாழுவதுடன் மட்டுமல்லாமல், புத்திசாதுரியமான அரசியலையும் செய்து வருகின்றனர். நோர்வே,கனடா போன்ற நாடுகளில் ஈழத்தமிழர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர்.அமெரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஈழத்தமிழர் உள்ளார். இவ்வாறாகச் சொந்த நாட்டில் இல்லாத உரிமை சுதந்திரம் சமத்துவத்தை மேற்குலக நாடுகள் தமிழர்க்கு வழங்கியுள்ளன. எனவே மேற்குலகில் தமிழர்கள் பல்வேறு துறைகளில் தடம் பதித்து வருகின்றனர். தமிழ் புத்திஜீவிகளை இலங்கை அரசு ஒதுக்கியது ஓரங்கட்டியது. இன வன்முறைகளால் அவர்களை அழிக்கவும் வாய்ப்பளித்தது. இதனால் இந்த நாட்டில் வாழ முடியாத தமிழர்கள் மேற்குலகில் இடம் பெயர்ந்து அந்த நாடுகளில் பக்கபலமாக இருந்து பல்வேறு துறைகளையும் வளர்ப்பதில் பங்களிப்புச் செய்கின்றனர். தமிழர்கள் என்பதற்காக அடிப்படைவாதத்தால் உதறித் தள்ளப்பட்டவர்கள் இன்று உலகநாடுகளில் ஈழத்தமிழர்களின் நீதி நியாயங்களைத் தேடும் சக்திகளாகவும் மூளை வளங்களாகவும் மாறியுள்ளனர். இனவாதத்தால் உதறப்பட்டவர்கள் தமது இனத்தைப் பாதுகாக்கும் சக்திகளாக மாறியுள்ளனர். நாட்டை வளர்க்க வேண்டிய மூளை வளங்களை எதிர் சக்திகளாக மாற்றிய சிங்கள ஆட்சியாளர்கள் 73 ஆண்டுகளுக்குப் பின்னராவது திருந்துவார்களா? இல்லை தொடர்ந்தும் பிற்போக்குவாதிகளாக இருக்கப்போகின்றார்களா? என்பதே எமது முனைப்பான பட்டறிவுக் கேள்வியாகும். பேரினவாதம் நாட்டை ஆக்கப்பாதையில் கொண்டு செல்லவில்லை அழிவுப்பாதைக்குக் கொண்டு சேர்த்துள்ளது என்பதே உண்மையாகும்.இதனைச் சிங்கள ஆட்சியாளர்கள் உணர்ந்துதான் ஆக வேண்டும். இல்லையென்றால் அது உணர்தப்பட்டேயாகும் என்பதே உலக நியதியாகும். யூக்கோஸ்லாவியா,சூடான், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் இந்த உண்மை உணர்த்தப்பட்டுள்ளது என்பது பட்டறிவுப்பகிர்வாகும். நாட்டை ஆக்கப்பாதையில் கொண்டு செல்ல வேண்டுமாயின் தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு என்பது காலத்தின் கட்டாய தேவையாகும்.இதன் மூலமாகப் புலம் பெயர்ந்த புத்திஜீவிகளின் ஆற்றல் அர்ப்பணிப்பு நிபுணத்துவம் செல்வம் போன்றவற்றை நாட்டின் அபிவிருத்திக்குப் பயன்படுத்தலாம். இல்லையென்றால் நாடு மேலும் குட்டிச்சுவராவதை எவராலும் தடுக்க முடியாது. அத்துடன் சீனா, அமெரிக்கா, இந்தியா, யப்பான் போன்ற நாடுகளின் போட்டிக்களமாகவும் இலங்கை மாறுவதைத் தவிர்க்க முடியாது. இதற்கு சீனாவால் கடலில் உருவாக்கப்பட்ட போட்சிற்ரி அம்பாந்தோட்டைத் துறைமுகம் முக்கியமான எடுத்துக்காட்டுகளாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?