காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலி
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி கருத்தப்பாலத்திற்கு அருகே காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செங்கலடி - கொடுவாமடு காளி கோயில் வீதியைச் சேர்ந்த 63 வயதான குஞ்சித்தம்பி காலிக்குட்டி என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை செங்கலடி கருத்தப்பாலத்திற்கருகே மாடு மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு காவலுக்கு செல்லும் போதே காட்டு யானை தாக்கியுள்ளது.
இதன்போது, சம்பவ இடத்தில் கூடிய பொது மக்கள் தொடர்ச்சியாக இப்பிரதேசத்தில் இடம்பெறும் காட்டு யானை அட்டகாசத்திற்கு எதிராக தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
நீண்ட காலமாக தாங்கள் இந்த பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற போதிலும் இராஜாங்க அமைச்சரோ , நாடாளுமன்ற உறுப்பினர்களோ இது தொடர்பில் கவனம் செலுத்தவில்லையெனவும், நாட்டின் ஜனாதிபதிக்கு இங்கு என்ன நடக்கின்றது என்பது தெரியாத நிலையே உள்ளதாகவும், இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் பொய்யான தகவல்களையே தெரிவிப்பதாகவும் மக்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்டதுடன்,விசாரனைகளையும் முன்னெடுத்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை,மாலை 06.00 மணியளவில் சம்பவ இடத்தில் இருந்து சற்றுத் தொலைவில் குடும்பஸ்தரை தாக்கிவிட்டு நின்ற யானையை வனவிலங்கு அதிகாரிகள் விரட்டியுள்ளனர்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்