கடும் நெருக்கடியில் இலங்கை அரசு -இந்தியாவிடம் கோரப்பட்ட உதவி
எரிபொருள் கொள்முதல் செய்ய இந்தியாவிடம் 500 மில்லியன் டொலர் கடனுதவியை இலங்கை அரசு கோரியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போதைய நிலவரப்படி வரும் ஜனவரி வரை மட்டுமே எரிபொருள் கையிருப்பு இருக்கும் என அண்மையில் எரிசக்தித் துறை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்த நிலையில், கடனுதவி கோரப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை 3.3 பில்லியன் டொலரை தாண்டியுள்ளது.
இதன் காரணமாகவும் எரிபொருள் கொள்முதலுக்கு இந்தியாவின் உதவியை இலங்கை நாடுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா தாக்கத்தால் கடும் அந்நிய செலவாணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை அடுத்து அதற்கென அதிகம் செலவிடும் நிலையில் உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்