தொடர்ந்து ஒரே நிலப்பாட்டில் இருக்கும் சிங்கள வெறியர்கள்,
விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூர ஒருபோதும் அனுமதியோம் -சரத்வீரசேகர ஆணித்தரம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை இலங்கையில் நினைவுகூர ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara ) தெரிவித்துள்ளார்.
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலில் பங்கேற்ற இரண்டு யுவதிகளின் கையடக்கத் தொலைபேசியை ஸ்ரீலங்கா காவல்துறையினர் பறித்ததை நியாயப்படுத்தி இன்று கருத்து வெளியிட்டுள்ள அவர், அங்கு சட்டத்தரணியாக முன்நின்றவரையும் கைது செய்திருக்க வேண்டும் எனவும் கூறினார்.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் தியாகதீபம் திலீபனை நினைவுகூரச்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (Selvarasa Gajendran ) உள்ளிட்ட சிலர் அதிரடியாக ஸ்ரீலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நினைவேந்தல் நடந்த இடத்திலிருந்த இரண்டு யுவதிகளை விசாரணை செய்த ஸ்ரீலங்கா காவல்துறையினர் அவர்களின் கையடக்கத் தொலைபேசியையும் பறித்துச் சென்றமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இது குறித்து கொழும்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, ஸ்ரீலங்கா காவல்துறையினர் செய்த செயலை நியாயப்படுத்தி கருத்து வெளியிட்டார்.
“திலீபன் என்பவரை நினைவுகூரும் நிகழ்வு நடந்தது. இதுபோன்ற கொவிட் நெருக்கடி மத்தியில் வெளியே நடமாடவும் அதேபோல விடுதலைப் புலிகளை நினைவுகூர அனுமதிக்க முடியாது. இதுபோன்ற நிகழ்வில் கலந்துகொண்டவர்களையே அன்று காவல்துறையினர் அங்கிருந்து வெளியேற்றினார்கள்.
திலீபன் நிகழ்வில் இரண்டு யுவதிகள் ஊடகப் பெயரைப் பயன்படுத்தி பங்கேற்றிருந்தனர். இறுதியில் ஊடக அடையாள அட்டையை கோரியபோது அவர்களால் அதனை சமர்ப்பிக்க முடியாமற்போனது. உண்மையில் அவர்கள் ஊடகவியலாளர்கள் அல்லர். அதன்பின்னர்தான் அவர்களது கையடக்கத் தொலைபேசியை காவல்துறையினர் பெற்றனர். அதற்கெதிராக அவர்கள் கூச்சல் எழுப்பினார்கள். அவர்களின் செயற்பாடு காவல்துறையினரது கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவே இருந்தது. அந்த சம்பவம் பற்றி அறிக்கையை நான் கேட்டுள்ளேன். சட்டத்தை சரிவர நாம் நடைமுறைப்படுத்தவேண்டும். அந்த இடத்தில் ஆங்கிலத்தில் உரத்த குரலாய் ஒருவர் கருத்து வெளியிட்டார். அவரையும் கடமைகளுக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டில் கைது செய்திருக்க வேண்டும்.
எனினும் குறித்த யுவதிகளை ஸ்ரீலங்கா காவல்துறையினர் இடையூறு செய்யவில்லை. அவர்கள்தான் திலீபனின் நினைவுகூரலில் பங்கேற்றிருந்தனர். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தவன். அங்கு தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த விடயங்கள் எனக்குத் தெரியும்.
மாணவர்களை இழுத்துச் சென்றமை, பிள்ளைகளை இழுத்துச் சென்றமை, வரி செலுத்துவோருக்கு ஏற்பட்ட அழுத்தங்கள் என பல விடயங்களை அவதானித்தேன்.
இந்நிலையில் போரில் உறவினர்கள் உயிரிழந்திருந்தால் வீட்டில் வைத்து விளக்கு ஏற்றி அவர்களை அஞ்சலிக்கலாம். ஜேர்மனியில் ஹிட்லரை நினைவுகூர முடியாது. அந்த வகையில் விடுதலைப் புலிகளை நினைவுகூர நாம் இடமளிக்கமாட்டோம்”
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்