முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b487

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றி இன்று முதல் பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன )
. நீண்ட காலங்களுக்குப் பின் இலட்சக்கணக்கான மாணவர்கள் பெரும் ஆவலுடன் இன்றைய தினம் பாடசாலைகளுக்கு சமுகமளிப்பரெனவும் குறிப்பிட்டுள்ளார். நீண்ட காலத்துக்குப் பின் தமது பிள்ளைகளின் மகிழ்ச்சியான முகத்தை நேரடியாக காண்பதற்காக அனைத்து ஆசிரியர்களும் பாடசாலைகளுக்கு சமுகமளிப்பார்களென தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். கல்வி என்பது பிள்ளைகளின் எதிர்காலமென்பதுடன் அது பிள்ளைகளின் வளர்ச்சிக்கான பலம் என்றும் குறிப்பிட்டுள்ள கல்வி அமைச்சர், அந்த கல்வியை பெற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரச அதிபர் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் தலையீடு செய்து நம்பிக்கைக்குரிய தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளனரென்றும் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் பருத்தித்துறை முதல் தெய்வேந்திரமுனை வரை, மேல் மாகாணம் தொட்டு கிழக்குமாகாணம் வரை பரந்து வாழும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமுகமளிப்பதை எவராலும் தடுக்க முடியாதென்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை இந்த நாட்டின் பிள்ளைகள் சுதந்திரமாக தமது கல்வியை பெற்றுக் கொள்வதற்கான உரிமையை பாதுகாப்பது எம் அனைவரதும் பொறுப்பென்றும் அந்த விடயத்தில் நாம் அனைவரும் கைகோர்த்து செயற்பட வேண்டுமென்றும் கல்விமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதுமுள்ள 200 மாணவர்களுக்கும் குறைவான எண்ணிக்கையுள்ள 3,800 பாடசாலைகள் இன்றைய தினம் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளன. அத்துடன் நான்கு கட்டங்களாக ஏனைய வகுப்புகள் கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளன. எனினும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தமது சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கக் கோரி கடந்த 100 நாட்களுக்கு மேல் கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து விலகி பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டிருந்தனர். அதனால் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்லைன் மூலமான கற்பித்தல் நடவடிக்கையும் தடைப்பட்டது. இத்தகைய சூழ்நிலையிலேயே இன்றைய தினம் பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிப்பதற்கு தீர்மானித்ததாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். பாடசாலை கல்வி, மாணவர்களின் எதிர்காலம், பெற்றோர்களின் மகிழ்ச்சி மட்டுமன்றி முழு நாட்டினதும் மகிழ்ச்சியாகுமென்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news b890

போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் ​சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.

e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?

  துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு,  By Gokulan  2 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந

d 265 சொந்த மகளை வண்புணர்வு புரிந்த தந்தைக்கு கடூழிய தீர்ப்பு

சொந்த மகளை வண்புணர்வு புரிந்த தந்தைக்கு கடூழிய தீர்ப்பு சொந்த மகளை மதுபோதையில் பாலியல் வண்புணர்வு புரிந்த தந்தை ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று 15 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார். மகளையே பாலியல் வண்புணர்வு புரிவது உலக நீதி, இயற்கை நீதி, சமூக நீதி என்ற அனைத்துக்கும் முரணான ஒரு குற்றச் செயலாகும். அத்தகைய குற்றத்தைப் புரிந்த குற்றவாளிக்குக் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என தனது தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்ச ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். சிறுமி சாட்சியம் சொந்த மகளை வண்புணர்வு புரிந்த தந்தைக்கு கடூழிய தீர்ப்பு | Cruel Prison For Father Abused His Own Daughter இந்தச் சம்பவம் 2015 ஆம் ஆண்டு தை மாதமளவில் மாங்குளம் பகுதியில் இடம்பெற்றதாக சட்டமா அதிபரினால் குற்றம் சாட்டப்பட்டு, தந்தையாகிய எதிரி கைது செய்யப்பட்டு, வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி 11 வயதுடைய பாடசாலை மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு விசாரணையின