‘‘புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் பேசுவது பயங்கரவாதிகளுடன் பேசுவதற்கு ஒப்பானது’’
"இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களுடன் பேசுவது பயங்கரவாதிகளுடன் பேசுவதற்கு ஒப்பானது என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் (G. L. Peiris) தெளிவுபடுத்தியுள்ளார்.
அண்மையில், ஐ.நா. பொதுச்செயலரை சந்தித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இலங்கையின் பிரச்சினைகள் உள்நாட்டு பொறிமுறையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும், புலம்பெயர் தமிழர்களுடன் இது தொடர்பாக பேச்சு நடத்தத் தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களில் இலங்கை அரசு தடை செய்த பட்டியலில் உள்ள அமைப்புக்களுடன் பேச்சு நடத்தப்படமாட்டாது என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இதற்கான காரணம் என்னவென்று பீரிஸிடம் ஊடகங்கள் வினவியபோது,
"உலகத் தமிழர் பேரவை, பிரிட்டிஸ் தமிழர் பேரவை, கனேடிய தமிழ் காங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், கனேடிய தமிழ் தேசிய சபை, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் உலகத் தமிழ் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவை பாதுகாப்பு அமைச்சகத்தால் தடை செய்யப்பட்ட அமைப்புக்களாகும்.
இந்த அமைப்புக்கள் தடை செய்யப்பட்ட நபர்களுடன் அரசு பேச்சு நடத்தாது. அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு இருந்த காலத்தில் நிதியுதவி வழங்கியவர்கள். இப்போதும் புலிகளுக்கு புத்துயிர் அளிக்க முயற்சிப்பவர்கள். அவர்களுடன் பேசுவது பயங்கரவாதிகளுடன் பேசுவதற்கு ஒப்பானது.
இலங்கையின் அபிவிருத்தியில் முன்னேற்றத்தில் பங்காளியாக செயற்பட விரும்பும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் இருக்கின்றன. அவர்களுடன் நாம் பேச்சு நடத்துவோம்" - என்று அவர் பதிலளித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியின் அறிவிப்பை வரவேற்றிருந்த தடை செய்யப்பட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள், சர்வதேச மத்தியஸ்துடன் பேச்சு நடத்தத் தயார் என்று அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இது பற்றி விடுதலை புலிகளின் முக்கிய உறுப்பினர் பீற்றர் குறிப்பிடும்போது சிங்களவர்கள் திருந்த மாட்டார்கள் ஆயிரம் வருடம் ஆனாலும் புலி புலி என பயந்து இறுதியில் பட்டினியை நோக்கி நகரும் நாட்டில் உணவுயில்லாமல் செத்து விடுவார்கள். என குறிபிட்டுள்ளார்,
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்