பாரிய போராட்டத்திற்கு தயாராகும் வட கிழக்கு - அணிதிரளுமாறு சாணக்கியன் அழைப்பு
வட கிழக்கு மக்களின் வாழ்வாதாரங்களை காப்பாற்றும் போராட்டங்களிற்கு அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiyan Rajaputhiran Rasamanickam) அழைப்பு விடுத்துள்ளார்.
வடமாகணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் M.A. சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் முழு ஆதரவுடன் மட்டக்களப்பிலும் எதிர்வரும் நாளை (18) நடாத்துவதாக தீர்மானித்துள்ளார்கள்.
இவ் கவனஈர்ப்பு போராட்டமானது தரை மற்றும் கடல் வழி என நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில்..! வெல்லாவெளியில் காலை 8 மணிக்கும், கொக்கட்டிச்சோலையில் 8.30 மணிக்கும், ஆயித்தியமலையில் 9.30 மணிக்கும், வந்தாறுமூலையில் 10.30 மணிக்கும், கிரானில் 11.30 மணிக்கும், என ஐந்து இடங்களில் விவசாயிகளால் இடம்பெறும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் அந்தந்த பகுதி பிரதேச தவிசாளர்கள் உறுப்பினர்கள், தமிழ்தேசியகூட்டமைப்பு உறுப்பினர்கள், இலங்கை தமிழரசு கட்சி தொகுதி கிளை, பிரதேச கிளை உறுப்பினர்கள், வாலிபர் அணி உறுப்பினர்கள், மகளீர் அணி உறுப்பினர்களும் உள்ளிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பு பங்காளிகட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளவது என முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்