பிரபல தமிழ் இசையமைப்பாளரை சந்தித்த யோகானி ; சீற்றத்தில் ஈழத் தமிழர்கள்!
அண்மையில் பிரபலமான இலங்கைப் பாடகி யோகானியை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பாடவைத்துள்ளமை ஈழத்தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரவணா ஸ்டோர்ஸ் அருள் சரவணன் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கு தெரிந்த செய்தி தான். அஜித்தின் உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி -ஜெர்ரி இந்தப் படத்தை இயக்குகின்றனர்.
இப்படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்திகா திவாரி தமிழில் அறிமுகமாகிறார். மேலும் பிரபு, விவேக், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். மதன்கார்க்கி மற்றும் வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுதுகிறார்கள். இந்தப் படத்தில் ஒரு பாடலுக்காக சமீபத்தில் மிகவும் பிரபலமாகியிருக்கும் இலங்கையைச் சேர்ந்த ஆல்பம் பாடகி யோகானியை அழைத்துப் பாட வைத்தியிருப்பதாக கூறப்படுகின்றது.
சில தினங்களுக்கு முன்பு அந்தப் பாடலின் ரெக்கார்டிங் மும்பையில் நடைபெற்றுள்ளது. இதன்போது ஹாரிஸ் ஜெயராஜ், யோஹனி மற்றும் மதன்கார்க்கி ஆகியோர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.
இதற்கு ஈழத்தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதேவேளை பாடகி யோஹனி சிங்கள இராணுவ தளபதி பிரசன்ன டி சில்வாவின் மகள் ஆவார்.
அதோடு சிங்கள இனவெறியர்கள் தமிழர்கள் மீது நடத்திய போரைப் புகழ்ந்து பாடிய பெண்ணை அழைத்து, தமிழில் பாட வைத்திருப்பதால் ஈழத் தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்