முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b458

அமெரிக்காவிற்கு அந்தர் பல்டி அடித்த இலங்கை
கெவரலப்பிட்டிய யுகதனவிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்கு அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்காக இதுவரை எந்தவொரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். கெரகலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பங்கை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கெவரலப்பிட்டிய யுகதனவிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்கு அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவது தொடர்பாக இதுவரை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் அதுதொடர்பில் இருதரப்பிக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவே தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதுதொடர்பாக அனைத்து தரப்பினரதும் கருத்துக்களையும் பெற்றுக்கொண்டு நாட்டுக்கு பொருத்தமான, ஆரோக்கியமான தீர்மானத்தையே அரசாங்கம் இறுதியில் முன்னெடுக்கும். அத்துடன் இந்திய வெளிவிவகார செயலாளர் கடந்த வாரம் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வந்து சென்று விட்டார். அவரின் விஜயம் தொடர்பாக பல்வேறு பொய் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன. அவர் எந்தவித அழுத்தத்தையும் இலங்கை அரசாங்கத்துக்கு பிரயோகிக்கவில்லை. குறிப்பாக 13ஆம் திருத்தம் தொடர்பாகவோ திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பாகவோ எந்தவித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை. அத்துடன் அவரது விஜயம் குறிப்பிட்ட ஒரு விடயத்துக்காக மேற்கொள்ளப்பட்டதொன்று அல்ல. இரண்டு நாடுகளுக்கிடையில் பூரண இணக்கப்பாடுகள் இருக்கின்றன. அவரின் விஜயத்தின் அடிப்படையாக இருந்தது பெளத்த தர்மமாகும். எமது கலாசாரம், பொருளாதாரம் என பல விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருத்திருந்தன.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news b890

போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் ​சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.