முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b484

போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்வது தொடர்பில் வழங்கப்பட்டுள்ள உத்தரவாதம்
பிரத்தானியாவின் மக்நிட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் இலங்கையின் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மீதான தடை ஆராயப்படும் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. சவேந்திர சில்வா உட்பட்ட இலங்கை போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்வது தொடர்பான மற்றுமொரு இராஜதந்திர சந்திப்பு ஒன்று, லூசியம் கிழக்கு பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்நிட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் (APPG for Magnitsky Sanctions) உப தலைவருமான ஜெனட் டாபி (Hon Janet Daby) அவர்களுடன் இன்று திங்கள் கிழமை (18/10/2021) இடம்பெற்றது. மனித உரிமை செயட்பாட்டாளரும் சட்ட ஆலோசகருமான கீத் குலசேகரம் தலைமையில் நடைபெற்ற இந்த முக்கிய சந்திப்பில் ITJP அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் கரிசன் (Frances Harrison), மற்றும் தெழில்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் (Tamils For Labour) அமைப்பின் தலைவர் திரு சென் கந்தையா ஆகியோர் விசேட பேச்சாளர்களாக கலந்து கொண்டனர். இச் சந்திப்பின் போது யுத்தக்குற்றவாளியான சவேந்திர சில்வா உள்ளிட்ட இலங்கை போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவில் தடைசெய்யவது பற்றி எதிர்வரும் 21 ஒக்டோபர் 2021 அன்று இடம்பெறவுள்ள, மக்நிட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் (APPG for Magnitsky Sanctions) முதலாவது கூட்டத்தில் கலந்துரையாடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் கீத் குலசேகரம் அவர்கள் முன்வைத்தார். பிரான்சிஸ் கரிசன் தனது உரையின் போது ITJP யினால் சமர்ப்பிக்கப்பட்ட சவேந்திர சில்வா தொடர்பான 50 பக்க குற்றப்பத்திரிகை பற்றியும், தற்போது தொடரும் சித்திரவதை பற்றியும் எடுத்துக்கூறி, சவேந்திர சில்வாவை தடை செய்வது ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்று தெரிவித்தார். சென் கந்தையாவின் உரையில் பிரித்தானிய நாடாளுமற்றில் இதுதொடர்பான விவாதம் ஒன்றை ஏற்பாடு செய்வது பற்றியும் அதற்கான உதவியையும் கோரியிருந்தார். இலங்கையில் சவேந்திர சில்வாவின் கட்டளையின் கீழ் இயங்கும் இராணுவத்தினர் மற்றும் பொலிசாரால் மிக அண்மையில் சித்திரவதைக்கு உள்ளாகி தப்பிவந்தவர்கள் சார்பில் சதேந்லொயிற்றன் புயலேந்திரன் மற்றும் வசிகரன் சதாசிவம் ஆகியோர் தமது அனுபவங்களை பகிர்ந்து, இலங்கையில் சித்திரவதைகள் தொடர்வதை உறுதிசெய்ததுடன், அதனை நிறுத்த பிரித்தானியா உடன் நடவடிக்கை எடுத்து, சவேந்திர சில்வா போன்றவர்களை தடை செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். இதன்போது ஜெனட் டாபி அவர்கள் அனைத்துக் கருத்துக்களையும் உள்வாங்கியதுடன், புதிதாக உருவாகியுள்ள மக்நிட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் (APPG for Magnitsky Sanctions) இதனை ஆராய்வதாகவும், தமிழ் மக்கள் சார்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் நாடாளுமன்றத்தில் தமிழர்கள் பிரச்சனையை விவாதிக்க அனுமதி பெற ஏற்பாடுகள் செய்வதாகவும், தான் வெளியுறவு அலுவலகத்திற்கு கடிதம் எழுதி பாதிக்கப்பட்டவர்களுடன் ஒரு சந்திப்பைக் கேட்பதாகவும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவித்த சித்திரவதைகள், கடத்தல்கள் மற்றும் துன்பங்களைப் பற்றி வெளியுறவு அலுவலகம் நேரடியாக கேட்டு அறியக்கூடிதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும், பிரித்தானியா வாழ் தமிழர் சார்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் உள்வாங்கி அமைக்கப்பட்டுள்ள All-Party Parliamentary Group for Tamils (APPGT) இல் தன்னை இணைத்துக் கொள்ளவும் சம்மதித்துளார். அவர் மேலும் தமிழர்கள் சித்திரவதைக்கு உள்ளாகுபடுவதை ஐக்கிய இராச்சியத்தின் முக்கியமான ஊடகங்கங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுவதற்கு வழிவகுப்பதாகவும் உறுதியளித்துள்ளார். இது இளையோராகிய எமது முயற்சிக்கு கிடைத்த ஒரு சிறு வெற்றியாகும் என்றும் இவ்வாறான சிறு படிகள் எமக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் தருகின்றன என்றும் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த முதன்மை செயற்பாட்டாளரான விஜய் விவேகானந்தன் தெரிவித்தார். அவரின் ஒருங்கிணைப்பில், கொவிட் காரணமாக மெய்நிகர் வழி (zoom) வழியாக இடம்பெற்ற இச் சந்திப்பில் விதுரா விவேகானந்தன், றஜூவன் பவளகாந்தன், சதேந்லொயிற்றன் புயலேந்திரன், கிறிஸ்டி நிலானி காண்டீபன், சுபதர்ஷ வரதராஜா, சுபமகிசா வரதராஜா, ரஜூவன் ரவிக்குமார் மற்றும் வசிதரன் சதாசிவம் ஆகியோர் கலந்துகொண்டனர். இவ்வாறான தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டுவரும் பிரித்தானிய இளையோரின் விடா முயற்சியால் இதுவரை 31 பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 மே 2021 பிரித்தானியாவில் கொண்டுவரப்பட்ட முன்பிரேரணையில் (Early Day Motion 64) கையெழுத்திட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news 303

 கொழும்பில் மீட்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம்! முழு விபரம் வெளியானது - பொலிஸார் பகீர் தகவல் கொழும்பு - டாம் வீதியில் பயணப் பையில் கண்டெடுக்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.. அதன்படி குறித்த சடலம் குருவிட்ட - தெப்பனாவ பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய திருமணமாகாத பெண்ணுடையது என பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும், டி.என்.ஏ பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். சி.சி.டி.வி காட்சிகள் மூலம் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் நடத்திய விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகின. அதாவது காணொளியில் காணப்படும் குறித்த நபர் பெண் ஒருவருடன் ஹங்வெல்ல பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு நடந்து செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது. எனினும், அந்த நபர் விடுதியிலிருந்து பயணப் பையுடன் வெளியேறி 143 மார்க்க ஹங்வெல்ல - புறக்கோட்டை பேருந்தில் ஏறியதாக பொலிஸார் தெரிவித்தனர். இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், ​​அந்தப் பெண் குறித்த தகவல்கள் வெளிவந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். மேலும் சந்தேகநபர் புத்தளம் ப

TAMIL Elam news b613

சிறப்பான முறையில் நடைபெற்ற மாவீரர் நாள். 27 November 2021 குயின்ஸ்லாந்து மாநிலம் RUNCORN என்ற இடத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. பெரும் திரளான தாயக உறவுகள் கலந்து கொண்டு மாவீரர் செல்வங்களிற்கு அஞ்சலி செலித்தினார்கள். குயின்ஸ்லாந்து மாநில நேரப்படி 6 மணிக்கு நிகழ்வு ஆரம்பம் ஆனது. முதலாவது நிகழ்வான பிரதான பொதுச்சுடரை லெப்ரின் பொற்தேவன் அவர்களின் சகோதரன் பவான் அவர்கள் ஏற்றி வைத்தார். அடுத்து அவுஸ்திரேலியா தேசியக்கொடியை கரும்புலி மேஜர் காந்தி அவர்களின் சகோதரன் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை திரு ரவி அவர்கள் ஏற்றி வைத்தார். முதன்மை ஈகைச் சுடரை லெப் கேணல் டிக்கான் அவர்களின் சகோதரி. அவர்கள் ஏற்றி வைத்தார். அடுத்து மாவீரர் பெற்றோர்கள் உறவினர்கள் மாவீரர் கல்லறைகளிற்கு சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்கள். தொடர்ந்து தாய் நாட்டை மீட்பதற்காகப்போராடி வீரச்சாவு அடைந்த மாவீரர்களிற்கும் அதன்பால் கொல்லப்பட்ட எமது உறவுகளிற்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அடுத்து மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. முதலாவது மாவீரன் சங்கர் அவர்களின் படத்திற