முடக்கப்பட்டது பிரபல புலம்பெயர் ஊடகத்தின் இன்ஸ்டகிராம்! உலகப் பிரபலங்கள் கண்டனம்!!
இலங்கையில் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைகள் குறித்து மேற்குலக ஊடகப்பரப்பில் ஆங்கிலமொழி ஊடாக வெளிப்படுத்திவரும் தமிழ்கார்டியன் (Tamil Guardian) ஆங்கில செய்தி இணையத்தளபக்கம் 'இன்ஸ்டகிராம்' ( Instagram) சமூக வலைத்தளப்பக்கத்தில் இருந்து செயலிழக்கவைக்கபட்டமைக்கு எதிராக பிரித்தானியா மற்றும் கனடாவில் உள்ள அரசியல் பிரபலங்கள் மற்றும் ஊடகர்கள் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.
முன்னறிவித்தல் ஏதுமின்றி இன்ஸ்டகிராம் சமூக ஊடகப்பக்கத்தில் இருந்து 'தமிழ்கார்டியன்' இணையத்தளத்தின் பக்கம் செயல் இழக்கச் செய்யப்பட்டுள்ளமையின் பின்புலங்கள் கடுமையான சந்தேகங்களையும் வினாக்களையும் எழுப்பியுள்ளன.
முன்னதான இந்த செயல் இழப்பு குறித்து தனது தரப்பில் ஒரு தன்னிலை விளக்கத்தை வழங்கியுள்ள 'தமிழ் கார்டியன்' முன்னறிவித்தலோ அல்லது உரிய விளக்கமோ வழங்கப்படாமல் தமது இணையப்பக்கம் இன்ஸ்டகிராமில் முடக்கபட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளது.
'இன்ஸ்டகிராம்' சமூக ஊடகத்தின் இந்த நகர்வு அவசியமற்ற ஆபத்தான இணைய தணிக்கைக்கு நிகரான நடவடிக்கை எனவும் தமிழ் கார்டியன் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் தமிழ் ஊடகவியலாளர்கள் நாளாந்தம் போராடும் ஒடுக்குமுறை, தணிக்கை, அநீதிக்கு இன்ஸ்டகிராமும் துணைபோகின்றதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த நிலையில் இந்தவிடயத்தில் தற்போது தமிழ் கார்டியனுக்கு பிரித்தானியா மற்றும் கனடாவில் இருந்து அரசியல் ஆதரவு குரல்கள் வலுவடைந்துள்ளன.
இந்த இணைய தணிக்கை ஏன் மேற்கொள்ளப்பட்டது என்ற விளக்கம் அளிக்கப்பட வேண்டுமெனவும் லண்டன் ஹரோ நாடாளுமன்ற உறுப்பினர் கெரத் தோமஸ் தெரிவித்துள்ளார்.
அதேபோல பிரித்தானியாவின் முக்கியமான புலனாய்வு ஊடகரான பில் மில்லர் இந்த விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளதுடன்தான் தமிழ் கார்டியனுக்கு தனது தோழமையை வெளிப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் செயல் இழக்கச் செய்யப்பட்ட விடயம் கண்டிக்கத்தக்கது என கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கெரி ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
தமிழ் இனத்தின் அமைதியான ஜனநாயகக் குரல்களை அடக்கும் நோக்கில் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டதாகவும், இது நிறுத்தப்பட வேண்டுமென்பதோடு, இந்தக் கணக்கை உடனடியாக மீட்டுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல பிரம்டன் நகர முதல்வர் பெற்றிக் பிரவுணும் கருத்துதெரிவித்துள்ளார்.
இது ஜனநாயகக் குரல்களுக்கு எதிரான மூர்க்கத்தனமான தணிக்கை எனவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவ்வாறன நகர்வுகள் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வெஸ் ஸ்ட்ரீடிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்