இலங்கையில் இருந்து வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் அனைவரும் மனநோக்கி ஆழாகுவதாகவும் இது நாட்டுக்காகப் போராடி வீரச்சாவு அடைந்த மாவீரர்களின் நிறைவேறதே தாக்கமாகயிருக்கலாம் என கருதப்படுகின்றது.
ஐரோப்பிய நாடு ஒன்றில் 2 பிள்ளைகளை கொலை செய்த இலங்கை பெண் சடலமாக மீட்பு!
இத்தாலியில் இலங்கைப் பெண் ஒருவர் தனது குழந்தைகளை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் , தலைமறைவான பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இத்தாலிய ஊடகங்களில் , ‘அவர்கள் என்னிடம் உண்மையைச் சொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன், என் குழந்தைகள் எப்படி இறந்தார்கள், ஏன் இவையெல்லாம் நடக்க முடிந்தது என்பதை அறிய விரும்புகிறேன்.” என உயிரிழந்த பெண்ணின் கணவர் ருவான் கிரிவெல்லகே கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.
அவரது மனைவியான சசித்ரா நினன்சலா பெர்னாண்டோ தேவேந்திர மஹவடுகே (34) என்பவரே, இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டு தற்கொலை செய்தார். பிள்ளைகளான 11 வயது சபாடி மற்றும் 3 வயது சிறுமி சந்தனி ஆகியோரே இவ்வாறு தாயாரால் கொல்லப்பட்டனர்.
இத்தாலியின் வெரோனா நகராட்சியின், போர்டோ சான் பான்கிரேசியோவில் உள்ள சமூக சேவைகள் கட்டமைப்பால் நிர்வகிக்கப்படும் இல்லத்தில் இந்த கொலைகள் அரங்கேறியுள்ளன. நேற்று முன் தினம் 25ஆம் திகதி காலை 9 மணிக்கு சற்று முன்னதாக பிள்ளைகள் இருவரையும் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, வீட்டிலிருந்து சசித்ரா காணாமல் போனார்.
அதன் பின்னர் நேற்று பிற்பகலில், அடிகே ஆற்றங்கரையில் அவரது தனிப்பட்ட உடமைகள் கண்டெடுக்கப்பட்டதுடன் செல்போனும் அவரது கைப்பையில் இருந்தது. அதன் பின்னர் சற்று தாமதமாக, லாசரேட்டோ பகுதியில் உள்ள பழைய அணைக்கட்டு அருகே அடிகே ஆற்றில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. பிள்ளைகளின் சடலம் மீதான பிரேத பர அறிக்கையின்படி, அவர்கள் தலையணையால் அழுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் “தயவுசெய்து சிறுமிகளுக்கு காய்ச்சல் இருக்கிறது, எனக்கு மருந்து கொடுங்கள். அவர்களை தூங்க விடுங்கள். நான் அவர்களை இன்று பள்ளிக்கு அனுப்பவில்லை. ‘ என்பதே சசித்ரரா நேற்று முன்தினம் காலை சமூக சேவகர் ஒருவரிடம் பேசிய கடைசி வார்த்தைகள் என கூறப்படுகின்றது.
அங்குள்ள சமூக சேவகர்களிடம் அவர் அடிக்கடி, “பிள்ளைகளை அவர்களின் அப்பாவிடம் கொடுப்பதை விட நான் அவர்களைக் கொல்வேன்” என கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த அந்த கொடூர சம்பவத்தை, இல்லத்திலுள்ள சமூக சேவகரான பெண்ணொருவர் விபரித்தார்.
“இரண்டு மகள்களும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், காய்ச்சலுக்கு மருந்து தேவையென்றும் கேட்டார். சிறிது நேரம் கழித்து, அறைகளுக்குச் சென்றேன். இரண்டு சிறுமிகளும் படுக்கையில் தூங்குவது போல் இருந்தது. குளியலறையில் விளக்கு எரிந்தது. அவர்களின் அம்மா குளியலறையில் இருப்பதாக நினைத்து அறையை விட்டு வெளியேறினேன். பின்னர் சுமார் பத்து நிமிடங்களுக்குப் பிறகு அறைக்கு சென்றேன்.
குளியலறையில் நுழைந்து யாரும் இல்லை என்பதை உணர்ந்து சிறுமிகளை சோதனை செய்தபோது அவர்களில் அசைவிருக்கவில்லை. குளியலறை ஜன்னல் திறந்திருந்தது, எனவே அவர்களின் தாயார் நிச்சயமாக அங்கிருந்து வெளியேறி விட்டார் என்பது தெரிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
சசித்ரா, கணவருடன் முரண்பட்டு, வெனிஸ் சிறுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, சமூக சேவைகள் கட்டமைப்பால் நிர்வகிக்கப்படும் அரச பராமரிப்பு குடியிருப்பொன்றில் குழந்தைகளுடன் தங்கியிருந்தார்.
அவர்கள் தங்கியிருந்த அந்த குடியிருப்பிற்கு செல்ல, கணவர் ருவான் கிரிவெல்லகேவிற்கு அனுமதியில்லை. அவர் தனது குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்ததாக, கணவர் மீது சசித்ரா குற்றம் சுமத்தியதுடன் பொலிசிலும் முறையிட்டார்.
இதையடுத்தே, நீதிமன்றம் அரச பராமரிப்பு குடியிருப்பொன்றில் வாழ உத்தரவை பிறப்பித்தது. இதேவேளை தன்மீதான , குற்றச்சாட்டை கணவர் ருவான் கிரிவெல்லகே மறுத்ததுடன் மனைவி சசித்ரா மனநல பிரச்சனைகளுடன் இருப்பதாக குறிப்பிடுகிறார்.
38 வயதுக்குடைய ருவான், இளமை பருவத்தில் இலங்கையிலிருந்து இத்தாலிக்கு சென்று, வெரோனாவில் பெட்டி தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிகிறார். இந்த துரதிக்ஷ்டவசமான சம்பவத்தின் பின், இத்தாலிய ஊடகங்களில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
“என் மனைவி எப்போதும் ஒரு நல்ல அம்மாவாக இருந்தாள். ஆனால் உண்மை என்னவென்றால், அவளுக்கு மனநல பிரச்சினைகள் இருந்தன, அதனால்தான் ஒரு உளவியலாளரிடம் செல்ல பரிந்துரைத்தேன் என கூறியுள்ளார்.
“நாங்கள் 2006 இல் சந்தித்தோம், அவர் எனது தூரத்து உறவினர் மற்றும் இலங்கையில் வசித்து வந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் வெரோனாவிற்கு என்னிடம் வந்து சேர்ந்தார், நாங்கள் திருமணம் செய்துகொண்டோம், 2010 இல் சபாடி பிறந்தார்’ என்றார்.
“நான் யாருக்கும் அல்லது யாருக்கும் தீங்கு செய்ததில்லை, என் மகள்களை கண்டிப்பது கூட இல்லை. ஆனால், திடீரென மனைவி அப்படியொரு குற்றச்சாட்டை சுமத்தினார். ஆனால் உண்மை அதுவல்ல. எனினும், அவரது மனதில் அப்படியொரு எண்ணம் படிந்து விட்டது. எங்களது திருமண வாழ்க்கை எளிதானதாக அமையவில்லை. அவர் எப்போதும் மனநல பிரச்சனைகளை வெளிப்படுத்தினார்.
பல நேரங்களில் மிகவும் அமைதியாக இருந்து வெறுப்பின் எல்லைகளுக்குச் சென்றார். பல நேரங்களில் அவர் நிதானமிழந்தார். என்னை பல முறை அடித்தார். ஒரு சந்தர்ப்பத்தில் அவர் ஒரு கத்தியைப் பயன்படுத்தினார்.
திடீரென ஒருநாள் எனக்கு தகவல் தராமல், மூத்த மகள் சபாடியை அழைத்துக்கொண்டு இலங்கை திரும்பினாள். அங்கு சிறிது காலத்திற்குப் பிறகு எங்கள் மகள் நோய்வாய்ப்பட்டாள். அப்போதுதான் நான் என் மனைவியை இத்தாலிக்குத் திரும்பும்படி வற்புறுத்த முடிந்தது. அதன்பின்னர் நாங்கள் சிறிது காலம் நன்றாக இருந்தோம், விஷயங்கள் செட்டில் ஆகிவிட்டதாகத் தோன்றியது.
ஓகஸ்ட் 2018 இல், சந்தனி பிறந்தார். ஆனால், மீண்டும் அவரது மனநல பிரச்சனைகள் வெளிப்பட்டன. மீண்டும் ஆக்ரோஷமானவராக மாறினார். நாங்கள் ஒரே வீட்டிலேயே வாழ்ந்தோம், ஆனால் நான் மகள்களை பார்ப்பதைத் தடுக்க அவர் எல்லாவற்றையும் செய்தார். சில நேரங்களில், நான் வீட்டில் இருந்தால், அவர் அவர்களை அறையில் மறைத்து வைப்பார். இறுதியில் 2019 கோடையின் தொடக்கத்தில் அவர் மகள்களுடன் சேர்ந்து, சமூக சேவைகள் கட்டமைப்பின் கீழுள்ள பராமரிப்பு இல்லத்திற்கு சென்றார்.
அதன்பின்னர், மிகச் சில சந்தர்ப்பங்களில் பிள்ளைகளை சந்தித்தேன். ஏப்ரல் 2020 இல், சபாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், சில நாட்களுக்கு நான் அவளைப் பார்க்க முடிந்தது. அந்த வருடத்தில் இரண்டு முறை, சிறிய மகளை என்னால் பார்க்க முடிந்தது. சில மாதங்களுக்கு முன்பு குடியிருப்பு அனுமதி புதுப்பித்தலுக்காக காவல் நிலையத்தில் நடந்த கூட்டத்தைத் தவிர வேறு சந்திப்புக்கள் எதுவும் இல்லை எனவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் எனது பிள்ளைகளின் பிறந்தநாளைக் கொண்டாடச் சொன்னபோது, அது சாத்தியமில்லை, என் மனைவி ஒப்புக் கொள்ளாததால் நான் காத்திருக்க வேண்டும் என்று சமூக சேவைகள் நிலையத்தினர் பதிலளித்தனர்.
2016 இல் சசித்ரா என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. நான் மகள்களை பார்ப்பதற்குள்ள கட்டுப்பாடுகளை நீதிமன்றம் நீக்கியது. ஆனால் சமூக சேவைகள் நிலையத்தினர் , நான் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும், ஏனென்றால் சந்திப்புக்களை கவனமாகத் தயாரிக்க வேண்டும், இளைய குழந்தை என்னை நினைவில் கொள்ளாமலிருக்கலாமென்றார்கள்.
செவ்வாய்க்கிழமை என்ன நடந்ததென எனக்குத் தெரியாது, அவள் உண்மையில் பிள்ளைகளைக் கொன்றாள் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. அதனால்தான் என்ன நடந்தது என்பதை யாராவது என்னிடம் சொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். “பாதுகாப்பு மையங்கள்” என்று கூறப்படும் அந்த அமைப்பில் சில பெண்கள் எப்படி இறந்தனர் என்பதை நான் அறிய விரும்புகிறேன்.
மேலும் எனது பரிந்துரைகள் ஏன் கணக்கில் எடுக்கப்படவில்லையென்பதை அவர்கள் எனக்கு விளக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார். சபாடியையும் சந்தானியையும் என் பெற்றோரிடம் ஒப்படைக்கும்படி கேட்டிருந்தேன். என் மனைவிக்கு சிகிச்சை தேவை, ஒரு நிபுணரிடம் பேச வேண்டும் என்று நான் பலமுறை திரும்பத் திரும்ப சொன்னேன்.
நான் ஒருபோதும் செய்யாத விஷயங்களுக்காக, பிள்ளைகளை அவர்களின் தாய்மார்கள் என்னிடமிருந்து பிரித்து அழைத்துச் செல்ல யாரோ அனுமதிக்கிறார்கள், இப்போது மிகவும் தாமதமாக இருந்தாலும் குறைந்தபட்சம் இப்போது நான் பதில்களுக்கு தகுதியானவன் என்றார். மேலும் பிள்ளைகள் பற்றி குறிப்பிட்ட போது, “நான் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவுடன், என்னால் முடிந்தவரை, மூத்த மகளுடன் எல்லா மதியங்களையும் கழித்தேன்.
நான் அவளை விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் சென்றேன், நாங்கள் ஒன்றாக வேடிக்கையாக இருந்தோம். எனினும் துரதிர்ஷ்டவசமாக, இளையவளைப் பற்றிய நினைவுகள் எனக்கு மிகக் குறைவு, ஏனென்றால் அவள் சில மாதங்களாக இருந்தபோது அவளுடைய தாய் அவளை அழைத்துச் சென்றுவிட்டார்.
நான் கண்களை மூடும் போதெல்லாம், என் பிள்ளைகளை கைகளில் வைத்திருப்பதைக் போல உணர்கிறேன்’ என ருவான் கிரிவெல்லகே கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்