முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b512

COVID-19 தொற்றினால் இறந்தவர்கள் குறித்த தரவுகளை, ஆஸ்திரேலிய புள்ளிவிவரத் துறை வெளியிட்டுள்ளது. இறந்தவர்கள் எண்ணிக்கையை ஒப்பிடும் போது, ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள் எண்ணிக்கையை விட வெளிநாடுகளில் பிறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகும்.
புள்ளிவிவரத் துறை வெளியிட்டுள்ள தரவுகளில், ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை பெருந்தொற்று ஏற்பட்டதால் மரணித்தவர்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து, ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை 920 பேர் தொற்றினால் இறந்துள்ளார்கள். இவர்களில் 397 பேர் இந்நாட்டில் பிறந்தவர்கள். மக்கள் தொகையின் விகிதாசார அடிப்படையில், இங்கு பிறந்தவர்கள் ஒரு லட்சம் பேரில் இரண்டு பேர் Covid-19 தொற்றினால் மரணித்துள்ளார்கள். ஆனால், வெளிநாடுகளில் பிறந்த ஒரு லட்சம் பேரில் இறந்தவர்கள் எண்ணிக்கை நான்கை விட சற்று அதிகம். வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் பிறந்தவர்களின் வயது-தரப்படுத்தப்பட்ட இறப்பு விகிதம் 6.0 ஆகவும், தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் பிறந்தவர்கள் 8.4 ஆகவும் உள்ளனர். பிரித்தானியா மற்றும் அயர்லாந்தில் இருந்து குடியேறியவர்கள் COVID-19 தொற்றினால் இறந்தவர்கள் மிகக் குறைவு (ஒரு இலட்சம் பேரில் 1.8). The data shows for every 100,000 people, the rate of death was more than two times higher in those born overseas. The data shows for every 100,000 people, the rate of death was more than two times higher in those born overseas. Australian Bureau of Statistics ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளில் விநியோகிக்கப்பட்ட அரசின் சுகாதார அறிவிப்புகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தன என்றும், காலாவதியான தடுப்பூசி ஆலோசனைகள் வெளியிடப்பட்டிருந்தன என்பதை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சியான Labor கட்சி, பெருந்தொற்று பரவ ஆரம்பித்த வேளை Scott Morrison தலைமையிலான அரசு பன் மொழி, பல்கலாச்சார சமூகங்களுக்குத் தேவையான ஆதரவை வழங்கவில்லை என்று குற்றம் சாடியுள்ளது. தொற்றினால் இறந்தவர்களின் சமூக-பொருளாதார பின்னணி ஒரு பாரிய காரணியாக அமைந்திருந்தன என்பதை புள்ளி விவரத்துறை வெளியிட்டுள்ள தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. Covid-19 தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை, பணக்காரர்களை விட (83) பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய (311) மக்கள் மூன்று மடங்கு அதிகமாகும். ஒட்டுமொத்தமாக, ஆண்களை விட (446) பெண்கள் அதிகமாக (474) இறந்துள்ளார்கள், அத்துடன் இறந்தவர்களின் சராசரி வயது 86.9 ஆண்டுகள் (ஆண்களுக்கு 85.2 ஆண்டுகள், பெண்களுக்கு 88.4 ஆண்டுகள்) ஆகும். தொற்றினால் இறந்தவர்களில் 73 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஏற்கனவே உடல் நலம் குன்றியவர்கள் என்பதை அவர்களின் இறப்புச் சான்றிதழ்கள் சுட்டிக் காட்டுகின்றன. தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து இதுவரை (வியாழக்கிழமை வரை), 1,696 பேர் Covid-19 தொற்றினால் இறந்துள்ளார்கள். தொற்றினால் விக்டோரியாவில் மேலும் 25 பேர் புதன்கிழமை நள்ளிரவு முதல் வியாழக்கிழமை நள்ளிரவு வரையிலான 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார்கள். தொற்று அதிகமாகிய அண்மைய நாட்களில், ஒரு மாநிலத்தில் ஒரு நாளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையின் உச்சம் இதுவாகும்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news 303

 கொழும்பில் மீட்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம்! முழு விபரம் வெளியானது - பொலிஸார் பகீர் தகவல் கொழும்பு - டாம் வீதியில் பயணப் பையில் கண்டெடுக்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.. அதன்படி குறித்த சடலம் குருவிட்ட - தெப்பனாவ பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய திருமணமாகாத பெண்ணுடையது என பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும், டி.என்.ஏ பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். சி.சி.டி.வி காட்சிகள் மூலம் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் நடத்திய விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகின. அதாவது காணொளியில் காணப்படும் குறித்த நபர் பெண் ஒருவருடன் ஹங்வெல்ல பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு நடந்து செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது. எனினும், அந்த நபர் விடுதியிலிருந்து பயணப் பையுடன் வெளியேறி 143 மார்க்க ஹங்வெல்ல - புறக்கோட்டை பேருந்தில் ஏறியதாக பொலிஸார் தெரிவித்தனர். இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், ​​அந்தப் பெண் குறித்த தகவல்கள் வெளிவந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். மேலும் சந்தேகநபர் புத்தளம் ப

TAMIL Elam news b613

சிறப்பான முறையில் நடைபெற்ற மாவீரர் நாள். 27 November 2021 குயின்ஸ்லாந்து மாநிலம் RUNCORN என்ற இடத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. பெரும் திரளான தாயக உறவுகள் கலந்து கொண்டு மாவீரர் செல்வங்களிற்கு அஞ்சலி செலித்தினார்கள். குயின்ஸ்லாந்து மாநில நேரப்படி 6 மணிக்கு நிகழ்வு ஆரம்பம் ஆனது. முதலாவது நிகழ்வான பிரதான பொதுச்சுடரை லெப்ரின் பொற்தேவன் அவர்களின் சகோதரன் பவான் அவர்கள் ஏற்றி வைத்தார். அடுத்து அவுஸ்திரேலியா தேசியக்கொடியை கரும்புலி மேஜர் காந்தி அவர்களின் சகோதரன் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை திரு ரவி அவர்கள் ஏற்றி வைத்தார். முதன்மை ஈகைச் சுடரை லெப் கேணல் டிக்கான் அவர்களின் சகோதரி. அவர்கள் ஏற்றி வைத்தார். அடுத்து மாவீரர் பெற்றோர்கள் உறவினர்கள் மாவீரர் கல்லறைகளிற்கு சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்கள். தொடர்ந்து தாய் நாட்டை மீட்பதற்காகப்போராடி வீரச்சாவு அடைந்த மாவீரர்களிற்கும் அதன்பால் கொல்லப்பட்ட எமது உறவுகளிற்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அடுத்து மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. முதலாவது மாவீரன் சங்கர் அவர்களின் படத்திற