அனைத்து துறைகளிலும் தோல்வியை நோக்கி நகரும் சிங்கள வெறியர்கள் யாரினுடைய சாவம் இது?
இலங்கை அணியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி!
ஐசிசி ரி20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகளில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின, இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி 17 ஓவரில் 155 ஓட்டங்களை எடுத்து வெற்றிபெற்றுள்ளது.
இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்ப்பில் குசல் பெரேரா மற்றும் சரித் அசலங்க இருவரும் தலா 35 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன் பானுக ராஜபக்ஷ ஆட்டமிழக்காமால் 33 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்துவீச்சில் மிச்சல் ஸ்டார்க், பெட் கம்மின்ஸ் மற்றும் அடம் ஷம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.
அதனடிப்படையில் அவுஸ்திரேலியா அணிக்கு 155 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
155 ஓட்டங்கள் வெற்றி இலங்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஆரேன் பிஞ்ச் அதிரடியாக ஆடிவந்தனர். அரேன் பிஞ்ச் 37ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் வனிந்து ஹாசராங்க பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய மெக்ஸ்வேல் செற்ப ஓட்டங்களுக்கு வெளியேற அவுஸ்திரேலியா அணி 8.3 ஓவரில் 80 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது.
பின்னர் களமிறங்கிய ஸ்மித் மற்றும் மறுமுனையில் அடிவந்த ஆரேன் பிஞ்ச் நிதனமாக அடிவந்தனர், இந்நிலையில் இலங்கை அணி நிர்ணயித்த 155 ஓட்டங்களை 17 ஓவரில் அவுஸ்திரேலிய அணி அடித்து வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 65 ஓட்டங்களை பெற்றுக் கொண்டிருந்தார். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்