கிளாஸ்கோ நகரை சென்றடைந்தார் ஜனாதிபதி
ஐக்கிய நாடுகள் சபையின் 26வது காலநிலை மாற்ற மாநாட்டில் (COP26) கலந்து கொள்வதற்காக சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரை சென்றடைந்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இன்று மதியம் 12.40 (உள்ளூர் நேரப்படி) மணியளவில் கிளாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தனர்.
ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன இலங்கைக் குழுவிற்கு வரவேற்பு அளித்தார்.
பருவநிலை மாற்றம் குறித்து விவாதிக்கவும், பருவநிலை நெருக்கடியைச் சமாளிக்க நாடுகள் தங்கள் உத்திகளை எவ்வாறு செயல்படுத்துகின்றன என்பதைப் பற்றி பேசவும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு கிளாஸ்கோவில் நாளை முதல் நவம்பர் 12 வரை நடைபெறுகிறது.
நவம்பர் 01 மற்றும் 02 திகதி உலகத் தலைவர்களின் உச்சி மாநாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் 197 நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள், அரசாங்கப் பிரதிநிதிகள், அறிஞர்கள் மற்றும் வணிகர்கள் உட்பட பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25,000 பேர் கலந்துகொள்வார்கள்.
ஐக்கிய இராச்சியத்தில் இதுவரை நடைபெற்ற மாநாடுகளில் இதுவே மிகப் பெரிய மாநாடு எனத் தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்டவர்கள் ஜனாதிபதியுடன் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்