முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b473

கோவிட் கட்டுப்பாடுகளினால் பாதிப்புக்குள்ளான சுற்றுலாத் துறை மற்றும் உணவகங்கள், மீண்டும் தங்கள் வியாபாரத்தில் முன்னேற்றமடைய ஊக்குவிக்கும் வகையில், நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து மற்றும் டாஸ்மேனியா மாநில அரசுகள் மக்களுக்கு இலவச கூப்பன் வழங்கும் திட்டங்களை அறிவித்துள்ளன.
நாட்டு மக்கள் $300 வரை மதிப்புள்ள பயண voucherகள் பெற முடியும், அத்துடன், கட்டுப்பாடுகள் விலக்கப்படும் சூழலில் மக்கள் அனுபவிக்கவென ஊக்கத் தொகை கிடைக்கிறது. NSW அரசாங்கம் அதன் பிரபலமான Dine and Discover voucher திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னர் கிடைத்த நான்கு voucherகளுக்கும் மேலதிகமாக இரண்டு $25 voucherகள் NSW மாநிலத்தில் வசிப்பவர்களுக்குக் கிடைக்கிறது. குயின்ஸ்லாந்து மாநில அரசும் தனது சொந்த voucher திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மாநிலத்தில் வாழ்பவர்கள் மாநிலம் முழுவதுமுள்ள சுற்றுலா இடங்களுக்கான கட்டணத்தில் 50 சதவீத கழிவு பெற விண்ணப்பிக்க முடியும். இந்த வகையான அறிவிப்புகளை டாஸ்மேனியா மாநில அரசும் தற்போது வெளியிட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் வசிப்பவர்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் டாஸ்மேனியா மாநிலத்திற்குப் பயணத்தை மேற் கொண்டால் $300 voucherகளைப் பெற முடியும். உணவு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக செலவிடலாம். அடுத்த வருடம் ஜூன் மாதம் வரை அவை செல்லுபடியாகும் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகமான சில மாதங்களில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டதால், பல voucherகள் பயன்படுத்தப்படாமல் இருந்தன. அவற்றின் பாவனைக் காலம் இரண்டு முறை நீட்டிக்கப் பட்டன. இப்பொழுது அறிவிக்கப் பட்டதையும் சேர்த்தால் NSW மாநிலத்தில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் $150 வழங்கப்பட்டுள்ளது. புதிய voucherகள் கோடை காலத்தில் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என்றும், Service NSW செயலி வழியாக அவற்றை மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும், அடுத்த வருடம் ஜூன் மாதம் வரை அவை செல்லுபடியாகும் என்றும் NSW மாநில Premier Dominic Perrottet கூறினார். கூடுதல் voucherகள் வழங்குவதால் மாநில அரசுக்கு மேலதிகமாக $ 250 மில்லியன் செலவாகிறது. என்ற பிரச்சாரத்தை குயின்ஸ்லாந்து மாநில Premier Annastacia Palaszczuk வியாழக்கிழமை காலை அறிவித்தார். குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தென்கிழக்கு, மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கு அதிகபட்சமாக $100 மற்றும் வடக்கு பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கு அதிகபட்சமாக $200 வரை என்று மக்கள் சுற்றுலாவிற்குச் செலவழிக்கும் பணத்தில் 50 சதவீதம் வரை தள்ளுபடிகளை அவர் அறிவித்தார். இந்த திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை, அக்டோபர் 18ஆம் தேதி காலை 9 மணிக்கு queensland.com இணையத்தளத்தில் தொடங்குகிறது. தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் வசிப்பவர்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் டாஸ்மேனியா மாநிலத்திற்குப் பயணத்தை மேற் கொண்டால் $300 voucherகளைப் பெற முடியும். இந்த திட்டத்தில், மொத்தமாக 10,000 voucherகள் வரை வழங்கப்படும். மேலும் பெறுநர்கள் தங்கள் பயணத்தின் போது $200 வரை தங்குமிடங்களிலும், $100 வரை சுற்றுலா மற்றும் பொழுது போக்கு நடவடிக்கைகளில் செலவிடலாம்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?