சற்றுமுன்னர் யாழிலிருந்து ஆரம்பமானது யாத்திரை!
யாழ்ப்பாணத்தில் இருந்து அடியவர்களின் யாத்திரை இன்றிரவு (17-09-2022) ஆரம்பிக்கப்பட்டது.
திருகோணமலை - திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியுள்ளது.
சற்றுமுன்னர் யாழிலிருந்து ஆரம்பமானது யாத்திரை! | Pilgrimage Begins From Jaffna Trincomalee Temple
கடந்த 11-ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் உள்ள இந்து மாமன்றத்தின் அலுவலகத்தில், நல்லை ஆதீன முதல்வர் தலைமையில் ஒன்றுகூடிய சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் எடுத்த தீர்மானத்துக்கு அமைய இந்த யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.
சற்றுமுன்னர் யாழிலிருந்து ஆரம்பமானது யாத்திரை! | Pilgrimage Begins From Jaffna Trincomalee Temple
ஈழத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க, தேவார பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரம் ஆலய நிலம் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதைத் தடுக்கும் நோக்கிலான முதல் நடவடிக்கையாக இந்த யாத்திரை முன்னெடுக்கப்படுகிறது.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்