சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 26 பேர் கைது
சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து புலம்பெயர முற்பட்ட 26 பேர் கடற்படையினரால் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினராலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை செய்திகள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 26 பேர் கைது | 26 People Were Arrested
யாழ்ப்பாணம்,வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்ட கடற்படையினர் சந்தேகத்திற்கிடமாக படகொன்று செல்வதை அவதானித்துள்ளதுடன், அதனை சோதனையிட்ட போதே சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து செல்ல முற்பட்ட சந்தேகத்தில் குறித்த 26 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 26 பேர் கைது | 26 People Were Arrested
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 18 வயதிற்கும் உட்பட்ட 04 பெண்களும், அடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள், உடுத்துறை, பூநகரி, குடத்தனை, ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் உரிய சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் எனவும் கடற்படை அறிவித்துள்ளது
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்