ஜெனீவாவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக 30 நாடுகள் (காணொலி)
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை மிகவும் காத்திரமானது என்ற வகையிலேயே நாம் பார்க்கின்றோம்.
தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான இராணுவத்தின் தொடர்ச்சியான கெடுபிடிகள் குறிப்பாக முன்னாள் போராளிகள் மீதான கெடுபிடிகள் போன்ற விடயங்களும் நில அபகரிப்பு போன்ற விடயங்களையும் அதிலே கோடிட்டு காட்டியிருக்கின்றார்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர் சுதா அவர்கள்.
ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இம்முறை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஈழத்தமிழ் சார்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் காணாளி வடிவில்
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்