c 954 இலங்கையில் தமிழர்களின் வளிபாட்டுத்தளங்கல் மீது திட்டமிட்டு வன்முறைகளை உருவாக்கும் சிங்களக் கைக்கூலிகள்,
இரு பெண்கள் உட்பட 9 பேர் அதிரடி கைது!
வவுனியா, பொன்னாவரசன்குளம் ஆலய வருடாந்த திருவிழாவின் போது இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி தொடர்பில் இரு பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் இன்று (10.09) தெரிவித்தனர்.
இந்நிலையில், வருடாந்த திருவிழாவின் கொடி இறக்கத்திற்கான பூசைகள் நேற்று (09.09) காலை இடம்பெற்ற போது அங்கு வந்த ஒரு குழுவினருக்கும், ஆலயத்தில் நின்றவர்களுக்குமிடையில் கைகலப்பு இடம்பெற்றது.
[NKE50H
இதன்போது, இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி காரணமாக உடனடியாக மூவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒருவர் காயம் காரணமாக மதியமளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
4 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். குறித்த, சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினர் உட்பட 20 இற்கு மேற்பட்டவர்கள் அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், அவர்களில் குறித்த சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யபப்பட்டுள்ளனர்.
குறிப்பாக,மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நெளுக்குளம் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்துகள்