பிரபல தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை - விசாரணையில் சிக்கிய அதிர்ச்சி கடிதம்
தமிழ் சினிமாவில் வாய்தா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை தீபா என்கிற பவுலின்(29).
இவர், நடிகர் விஷாலின் படமான துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார். இதனிடையே இவர், சென்னை விருகம்பாக்கத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர்கள் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
பிரபல தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை - விசாரணையில் சிக்கிய அதிர்ச்சி கடிதம் | Actress Powlenjessica Suicide In Chennai House
தீபா தற்கொலை செய்வதற்கு முன்பாக கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில், தான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன் என்றும், ஆனால் தன் காதல் கைக்கூடவில்லை என்பதால், இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்வதாகவும், தன் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியுள்ளார்.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்