முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 29 என் இனிய திலீபனே!

என் இனிய திலீபனே!
ஐயா தேசத்தின் கவி. புதுவை இரத்தினதுரை. ……………………………… எங்கே என் தம்பி? எங்கே என் தம்பி? இங்கே இருந்தானே, இருந்தவனைக் காணவில்லை எங்கே என் தம்பி? மெல்ல…மெல்ல அந்த விளக்கணையும் வேளையிலே எல்லோரும் சேர்ந்து ‘எண்ணையிடு’ என்றோமே கல்லான நெஞ்சே….! நீ கண்திறந்து பார்க்கவில்லை நாவரண்டு நாவரண்டு, நாதமணிப் பேச்சிழந்து பூ சுருண்டமாதிரியாய் போய்முடிந்து விட்டானா? காற்றே நீ மூசு, கடலலையே பொங்கி எழு. கூற்றுவனா? அவனைக் கொண்டுவந்து தூக்கிலிடு எங்கே என் தம்பி? எங்கே என் தம்பி? இங்கே இருந்தானே இருந்தவனைக் காணவில்லை என் இனிய திலீபனே! ஒரு வார்த்தை… ஒரே ஒரு வார்த்தை மட்டும்….. பேசிவிடு “தமிழீழம்” என்ற தாரக மந்திரத்தைச் சொல்லிவிட்டு; மீண்டும் தூங்கி விடு மக்கள் சமுத்திரத்தில் மரணித்து விட்ட வீரனே! ஒரு வார்த்தை; ஒரே ஒரு வார்த்தை மட்டும் பேசிவிட்டுத் தூங்கு…… என்னினிய தோழனே! உனது மரணப்படுக்கை கூட இங்கே மகத்துவம் மிக்கதாகி விட்டது நீ கண்மூடியபடி தூங்குகின்றாய் அந்தப் படுக்கை இங்கோர் பூகம்பத்தையே வரவழைக்கிறது உன் சாவே இங்கோர் சரித்திரமாகிவிட்டது செத்த பின்னர்! ஊர்கூடித் தேம்புவதுதான் இங்கு வழக்கம். ஆனால்…. ஊரே தேம்பிக் கொண்டிருந்தபோது மரணித்த வரலாறு உன்னுடன்தான் ஆரம்பமாகிறது சாவு பலதடவை உன்னைச் சந்திக்கவந்து தோல்வி கண்டது இப்போது சாவை நீயாகச் சந்திக்கச்சென்று வெற்றிகண்டு விட்டாய் என் இனிய திலீபனே! நீ கையில் ஆயுதம் ஏந்தியபோதும் உன்னை அருகிருந்து பார்த்துள்ளேன். நீ….நெஞ்சில் அகிம்சை ஏந்திய போதும் அருகிலி பார்த்துள்ளேன் எந்த வித்தியாசமும் தெரியவில்லை போராளிகளுக்குரிய போர்க்குணமே உன்னில் தெரிந்தது இந்திய அரசே! இது உனக்குப் புரிகிறதா? தம்பி திலீபன்…..உன்னிடம் என்னதான் கேட்டான் எங்களை சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கவிடு என்றான். எங்கள் மண்ணின் இறைமையைத் தா என்றான் இது குற்றமா? இதற்காகத்தானே போராடினான் இதற்காகத்தானே போராடினான் இதற்கு என்ன பதில் தரப்போகின்றாய்…… உன் பதிலை நேற்று வந்த விமானத்திலும் எதிர்பார்த்தோம் தாமதித்துவிட்டாய் நீ கடத்திய ஒவ்வொரு நொடிப் பொழுதும் இங்கோர் புயலையே உருவாக்கிவிட்டாய் திலீபன் என்ற புயல் உன்னைச் சும்மா விடாது உசுப்பியே தீரும் எங்கே என் தம்பி? எங்கே என் தம்பி? இங்கே இருந்தானே! இருந்தவனைக் காணவில்லை. என்இனிய திலீபனே! நிம்மதியாய்த் தூங்கு நிலம் வெடிக்கப் போகிறது நிம்மதியாய்த் தூங்கு நிலம் வெடிக்கப்போகிறது. காற்றே நீ முக கடலலையே பொங்கி எழு கூற்றுவனா? அவனைக் கொண்டுவந்து தூக்கிவிடு!

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?