யாழ் விடுதியில் பெண்ணுடன் உல்லாசம் ; வசமாக சிக்கிய பிரான்ஸிலிருந்து வந்த புது மாப்பிள்ளை!
யாழில் கடந்த சில நாட்களுக்கு முதல் திருமணம் முடித்து மணமகள் வீட்டில் தங்கியிருந்த பிரான்ஸ் புது மாப்பிளை இன்னொரு யுவதியுடன் யாழில் உள்ள பிரபல விடுதியில் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
யாழ் மானிப்பாயைச் சேர்ந்த 27 வயதான பெண்ணை யாழ் பண்டத்தரிப்பை சேர்ந்த பிரான்சில் வதிவிட அனுமதி பெற்று வசித்து வந்த 34 வயதான நபர் கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் முடித்திருந்தார்.
யாழ் விடுதியில் பெண்ணுடன் உல்லாசம் ; வசமாக சிக்கிய பிரான்ஸிலிருந்து வந்த புது மாப்பிள்ளை! | Flirting With A Girl In A Jaffa Hotel France Boy
திருமணம் முடித்து ஒரு கிழமைக்குள் தனது நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க வேண்டும் என கூறி யாழில் உள்ள பிரபல விடுதியில் அறை ஒன்றை ஒழுங்கு செய்திருந்த நிலையில் பார்ட்டிக்கு தானும் வருவதாக மனைவி கேட்ட போது அதற்கு மறுப்பு தெரிவித்து அவர் மட்டும் விடுதிக்கு சென்றுள்ளார்.
விடுதிக்கு சென்ற மனைவி
இதே வேளை மாப்பிளைக்கு பெரிய அளவில் நண்பர்கள் இல்லை என மாப்பிளையின் தாயார் கூறியதால் சந்தேகமடைந்த மனைவி தனது தம்பியையும் அழைத்துக் கொண்டு விடுதிக்கு இரவு 8 மணியளவில் சென்று விசாரித்துள்ளார், அதன் போது மாப்பிளையின் பெயரில் பதிவு செய்யப்பட்ட விடுதி அறைக்கு மனைவியும் தம்பியும் செல்ல முற்பட்ட போது விடுதி வரவேற்பாளர்கள் அனுமதிக்கவில்லை.
யாழ் விடுதியில் பெண்ணுடன் உல்லாசம் ; வசமாக சிக்கிய பிரான்ஸிலிருந்து வந்த புது மாப்பிள்ளை! | Flirting With A Girl In A Jaffa Hotel France Boy
அதே நேரம் மாப்பிளைக்கு உள்ளகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மனைவி வந்திருப்பதை கூறியுள்ளார்கள். இதனால் சந்தேகமடைந்த மனைவியும் மனைவியின் தம்பியாரும் விடுதி ஊழியர்கள் மறிக்க மறிக்க மாப்பிளையின் அறைக்கு சென்றுள்ளனர்.
அங்கு மாப்பிளை இன்னொரு யுவதியுடன் தங்கியிருந்ததை கண்டு பிடித்து கடும் வாக்குவாததில் ஈடுபட்ட மனைவி அறைக்குள் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகின்றது.
நையப்புடைத்த உறவினர்கள்
இதனையடுத்து அங்கு விரைந்த மனைவியின் உறவினர்களும் அங்கு வந்து மாப்பிளையுடன் தங்கியிருந்த பெண்ணையும் நையப்புடைத்துள்ளனர். இச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த விடுதி பாதுகாவலர்கள் மற்றும் ஊழியர்கள் அவர்களை வெளியேற்ற பெரும் சிக்கல் பட்டதாகத் தெரியவருகின்றது. இச் சம்பவத்தில் விடுதி ஊழியர் ஒருவரும் காயமடைந்துள்ளார்.
யாழ் விடுதியில் பெண்ணுடன் உல்லாசம் ; வசமாக சிக்கிய பிரான்ஸிலிருந்து வந்த புது மாப்பிள்ளை! | Flirting With A Girl In A Jaffa Hotel France Boy
இருப்பினும் இச் சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடுகள் எதுவும் கொடுக்கப்படவில்லை என தெரியவருகின்றது. இச் சம்பவத்தால் விடுதியில் தங்கியிருந்த ஏனைய சுற்றுலா பிரயாணிகளும் அதிர்ச்சியடைந்ததாக தெரியவருகின்றது.
அதேவேளை கடந்த சில நாட்களின் முன் இன்னொரு சுற்றுலாப்பிரயாணியானியின் திருவிளையாடலால் விடுதி அறை தீப்பிடித்து எரிந்தமை குறிப்பிடத்தக்கது.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்