சிறிலங்காவில் இந்திய இராணுவத்தின் அட்டூழியங்கள்! சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு அதிரடி நடவடிக்கை
விசாரணை
இலங்கையில் இந்திய இராணுவத்தை நிலைநிறுத்திய போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பொறிமுறைகள் மூலம் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் கோரியுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலியை மேற்கோள் காட்டி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மோதலின் போது இடம்பெற்ற சம்பவங்கள் உள்ளிட்ட அனைத்து சர்வதேச குற்றங்களுக்கும் தீர்வு காண இலங்கை மீது வலுவான தீர்மானத்தை கோருவதாக மீனாக்ஷி கங்குலி தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அட்டூழியங்களில் ஈடுபட்ட இந்திய இராணுவம்
சிறிலங்காவில் இந்திய இராணுவத்தின் அட்டூழியங்கள்! சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு அதிரடி நடவடிக்கை | Indian Army Sri Lanka Should Investigate Ohchr
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்திய படையினர் போர் நிறுத்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதாக அனுப்பப்பட்டிருந்த போது இடம்பெற்ற முறைகேடுகள் முறையாக விசாரிக்கப்பட்டு, பொறுப்புக்கூறல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 1987 ஜூலை முதல் 1990 மார்ச் வரையான காலப்பகுதியில் இந்திய இராணுவம் அட்டூழியங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டால், இந்தியாவின் பொறுப்புக்கூறல் எவ்வாறு அமையும் என முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே மீனாக்ஷி கங்குலி இந்த கருத்துகளை வௌியிட்டுள்ளார்.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்