முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 996 முன்னால்போராளிகள் தொடர்வா தமிழர்கள் தெளிவாக இருக்க வேண்டும்

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட எமது முன்னாள் போராளிகள் அரசியல் களத்தில்: க.துளசி
தமிழ் மக்களுக்கான அர்ப்பணிப்பு என்ற விடயத்தில் முன்னாள் போராளிகளை விட உதாரணத்திற்கு எவரையும் குறிப்பிட முடியாது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்றைய தினம் இடம்பெற்ற கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, தமிழ் மக்களுக்கான அர்ப்பணிப்பு என்ற விடயத்தில் முன்னாள் போராளிகளை விட உதாரணத்திற்கு எவரையும் குறிப்பிட முடியாது. ஜனநாயக வழியில் மக்களுக்காகப் போராட்டம் அவர்கள் இன்று ஜனநாயக வழியில் மக்களுக்காகப் போராட முன்வந்துள்ளார்கள். அவர்களின் அர்ப்பணிப்பை உணர்ந்து அவர்களுக்கான களத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது தமிழ் மக்களின் தலையாய கடமையாகும். மக்களின் ஆணையே ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துள்ள முன்னாள் போராளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராட முன்வந்த பல இயக்கங்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து செயற்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையிலே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட எமது முன்னாள் போராளிகளும் ஜனநாயக நீரோட்டத்தினூடாக அரசியல் களத்தில் நுழைந்துள்ளார்கள். தொடரும் அடக்குமுறைகள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட எமது முன்னாள் போராளிகள் அரசியல் களத்தில்: க.துளசி | Tamil People Politics In Sri Lanka ஆனால் யுத்தம் முடிவுற்று இத்தனை வருடங்களாகியும் எமது முன்னாள் போராளிகள் மீதான அடக்குமுறைகள், அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. தற்போது முன்னாள் போராளிகளாகிய நாம் தமிழ்த்தேசியப் பரப்பில் எமது மக்களுக்காக ஜனநாயக ரீதியில் போராட முன்வந்துள்ளோம்.
எமது போராளிகளுக்கான பாதுகாப்பு மக்கள் எமக்கு வழங்கும் ஆணையிலேயே தங்கியுள்ளது. தமிழ் மக்களுக்கான அர்ப்பணிப்பு என்ற விடயத்தில் முன்னாள் போராளிகளை விட உதாரணத்திற்கு எவரையும் குறிப்பிட முடியாது. ஏனெனில் எமது மக்களின் விடுதலைக்காக தனது உயிரைத் துச்சமென நினைத்து தன் குடும்பம், இளமை எதுவுமே பாராது ஆயுதமேந்திப் போராட வந்தவர்கள். வடக்கு கிழக்கில் தமிழினம் அவ்வாறானவர்களின் அர்ப்பணிப்பினாலேயே இத்தனை காலம் வடக்கு கிழக்கில் தமிழினம் நிலைத்திருக்க வழிவகுத்தது. அப்படியானவர்கள் இன்று ஜனநாயக வழியில் மக்களுக்காகப் போராட முன்வந்துள்ளார்கள். அவர்களின் அர்ப்பணிப்பை உணர்ந்து அவர்களுக்கான களத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது தமிழ் மக்களின் தலையாய கடமையாகும். இன்று முன்னாள் போராளிகள் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தங்கள் அரசியலை முன்னெடுத்து வருகின்றார்கள். பலதரப்பட்ட விசாரணைகள், கைதுகள் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்றன. போராளிகள் ஜனநாயக ரீதியில் போராட்டத்தை முன்னெடுப்பதை முடக்க வேண்டும். போராளிகள் அரசியல் களத்தில் மக்களுக்காக அர்ப்பணிப்போடு செயற்படுவார்கள் அவற்றைத் தடுத்து அவர்களாகவே அரசியலில் இருந்து ஒதுங்கிவிடச் செய்ய வேண்டும் என்ற விடயங்களை மையப்படுத்தி திட்டமிட்ட செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. கடந்த 1987களில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாகப் பல ஆயுதம் தாங்கிய போராட்ட இயக்கங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து அரசியல் நீரோட்டத்தில் இணைந்தன. ஆனால் தற்போது அந்த இயக்கங்களின் பிரதிநிதிகளுக்கு மக்களால் வழங்கப்படுகின்ற ஆணையால் அவ்வியக்கங்களின் உறுப்பினர்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் அரசியலில் ஈடுபட முடிகின்றது. அது போலவே எதிர்காலத்தில் அரசியல் களத்தில் எமது மக்கள் எமது முன்னாள் போராளிகளுக்கு வழங்கும் ஆணையே அவர்களை தமிழ் மக்களுக்கான சேவையைச் சுதந்திரமாகவும், எவ்வித அச்சுறுத்தல்கள் இல்லாமலும் மேற்கொள்ளும் நிலைமையை உருவாக்கும். எதிர்வரும் தேர்தல்களில் ஜனநாயகப் போராளிகள் கட்சியானது எமது தலைமையின் வழிநடத்தலில் உருவாக்கம் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கவுள்ளதுடன் பல தேர்தல்களிலும் களம் காணவுள்ளது. எனவே அதன்போது எமது போராளிகளைக் கருத்திற்கொண்டும், அவர்களின் அர்ப்பணிப்பை நினைவில் வைத்து மக்களுக்காகப் போராடிய போராளிகளின் பாதுகாப்பிற்கான தங்களின் ஆதரவை வழங்க வேண்டும். மக்களின் ஆணை ஒன்றே முன்னாள் போராளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்” என்று இதன்போது தெரிவித்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAMIL Eelam Eelam b965

ரஷ்ய - உக்ரைன் போர்! - இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் போர் பதற்றம் நீடித்துள்ள நிலையில், இன்று இடம்பெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுகள் எதும் எடுக்கப்படாமல் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இரு நாடுகளும் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாதம் 24ம் திகதி ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து 249 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை நேருக்கு நேர் சந்தித்து பேசுவுதே சிறந்த வழியென உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய இராணுவம் இன்றைய தினம் உக்ரேனிய நகரங்கள் மீது அதன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. பல நகரங்கள் மீது குண்டு தீவிர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் தொடர்கிறது என சர்வதேச ஊடகங்கள் குறிப்பி