முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 4 அனைவரும் அந்த அடக்குமுறையை வெறுக்கின்றார்கள்,

மொட்டையடித்த தலையுடனும் கருப்பு ஆடையுடனும் நீதி கிடைக்காத நாட்டிலிருந்து வந்துள்ளேன் - ஜெனீவாவில் பகிரங்கம்!
காணாமல் போன கணவருக்காக சளைக்காமல் போராடியதற்காக சர்வதேச விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர், சிறிலங்கா குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்காத நாடு என சர்வதேச சமூகத்திற்கு முன் தெரிவித்துள்ளார். பன்னிரெண்டு வருடங்களுக்கும் மேலாக நீதிக்காகப் போராடி வரும் சந்தியா எக்னலிகொட, ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அமர்வில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், "இன்று நீங்கள் காணும் எனது மொட்டையடிக்கப்பட்ட தலை மற்றும் கறுப்பு ஆடைகள், நான் குற்றவியல் சக்திகளுக்கு தண்டனை கிடைக்காத, பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்காத நாட்டிலிருந்து வந்துள்ளேன் என்ற செய்தியை உங்களுக்கு வழங்குகிறது. முடிவில்லாத போராட்டத்தில் சந்தியா எக்னெலிகொட மொட்டையடித்த தலையுடனும் கருப்பு ஆடையுடனும் நீதி கிடைக்காத நாட்டிலிருந்து வந்துள்ளேன் - ஜெனீவாவில் பகிரங்கம்! | United Nation Human Rights Session51 Eknaligoda வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட எனது கணவர் ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவுக்கு நீதி கிடைக்க ஒவ்வொரு நாளும் புதிய மற்றும் முடிவில்லாத போரில் ஈடுபட்டதோடு, வடக்கில் தாய்மார்களின் முடிவற்ற போராட்டம் குறித்து குரல் எழுப்பினேன். என்னைப் போன்று காணாமல் போன தமது உறவுகளை தேடி வரும் சிங்கள, தமிழ், முஸ்லிம் தாய்மார்கள் நாடு பூராகவும் உள்ளனர். வடக்கில் தமிழ் தாய்மார்கள் போராடி வருகின்றனர். என்னைப் போலவே, அவர்களும் காவல்துறை போன்ற பல அரசு நிறுவனங்களுடன் மோதுகிறார்கள், கடந்த நான்கு தசாப்தங்களில் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும், எந்தவொரு ஆணைக்குழுவும் காணாமல் போனவர்களுக்கோ அல்லது அவர்களது குடும்பங்களுக்கோ நீதி வழங்கவில்லை என்பதை சர்வதேச சமூகத்திற்கு நினைவுபடுத்துகின்றேன். பாதிக்கப்பட்டவர்கள் உண்மையையும் நீதியையும் அடைய நம்பக்கூடிய ஒரு சட்டப் பொறிமுறையைப் பெறுவதற்கு ஐ.நா தலையிட வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.
தைரியத்திற்கான விருது மொட்டையடித்த தலையுடனும் கருப்பு ஆடையுடனும் நீதி கிடைக்காத நாட்டிலிருந்து வந்துள்ளேன் - ஜெனீவாவில் பகிரங்கம்! | United Nation Human Rights Session51 Eknaligoda ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஜனவரி 24, 2010 அன்று பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டார். 2017 ஆம் ஆண்டில், இலங்கையில் நடந்த போரிலும் முந்தைய கிளர்ச்சிகளிலும் காணாமல் போன ஆயிரக்கணக்கான மக்களின் உறவினர்களின் அடையாளமாக மாறிய ஒரு பெண்ணாக சந்தியா எக்னெலிகொடவுக்கு அமெரிக்காவின் சர்வதேச தைரியத்திற்கான விருது வழங்கப்பட்டது. காணாமல் போன தனது கணவர் பிரகித் எக்னலிகொட குறித்த உண்மையை வெளிக்கொண்டுவர, அதிகாரிகளின் தடைகளையும் மீறி எண்பது தடவைகளுக்கு மேல் நீதிமன்றம் சென்று சந்தியா காட்டிய தைரியமே அவருக்கு இந்த விருது கிடைத்தமைக்கு காரணம் என அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் தோமஸ் ஏ ஷெனொன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news b890

போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் ​சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.