முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 30 தற்காலிக பாதுகாப்பு விசாவிலுள்ளவர்களுக்கு எப்போது நிரந்தர விசா கிடைக்கும்

? லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசாவுடன் உள்ளவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு விசா வழங்கப்படும் என்பதாக அக்கட்சி தேர்தல் வாக்குறுதியை வழங்கியிருந்தமை நாமறிந்த செய்தி.
ஆனால் லேபர் கட்சி ஆட்சிக்கு வந்து 4 மாதங்கள் கழிகின்ற நிலையில், இந்த வாக்குறுதியை அரசு இன்னமும் நிறைவேற்றவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பில் அண்மையில் Guardian-க்கு வழங்கிய நேர்காணலில் கருத்துத் தெரிவித்த குடிவரவு அமைச்சர் Andrew Giles, தமது வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும் எனவும் அந்த வாக்குறுதியை லேபர் அரசு மறந்துவிடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் எப்போது இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் எனக் கேட்டதற்கு, கூடிய விரைவில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பதிலளித்துள்ளார். Advertisement இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் Andrew Giles தெரிவித்த கருத்துக்கள் வருமாறு: கடந்த 10 ஆண்டுகளாக, TPVகள் மற்றும் SHEV களில் இருப்பவர்கள் நிச்சயமற்ற நிலையில் வாழ்கிறார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மக்களின் விரக்தியையும் கவலையையும் நான் உண்மையில் உணர்கிறேன். தற்காலிக பாதுகாப்பு விசாக்களில் உள்ளவர்கள் நிலையான எதிர்காலத்திற்கு தகுதியானவர்கள். குறிப்பாக தங்கள் வணிகங்களை மேம்படுத்த, வீடுகளை வாங்க, படிக்க மற்றும் பாதுகாப்பான வேலைவாய்ப்பை பெற தகுதியானவர்கள்- அவர்களில் பலர் regional பகுதிகளில் உள்ளனர். இவர்களுக்கான நிரந்தர விசாவை வழங்குவதன் ஒரு கட்டமாக TPV/SHEV வைத்திருப்பவர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் நாடாளுமன்றின் cross bench உறுப்பினர்களைச் சந்தித்து ஆலோசனை செய்துள்ளோம். தற்காலிக பாகாப்பு விசாவுடன் உள்ளவர்களுக்கான தீர்வு பயனுள்ளதாகவும் நீடித்ததாகவும் இருக்கவேண்டுமென்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். கடந்த தேர்தலில் நாங்கள் செய்த அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்றுவோம். அதற்கான பதையில் நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். நிச்சயம் விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் Andrew Giles தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார். இதேகருத்துக்களை குடிவரவு அமைச்சர் தனது twitter பக்கத்திலும் இம்மாத ஆரம்பத்தில் பகிர்ந்திருந்தார். ஆஸ்திரேலியாவில் சுமார் 19 ஆயிரம் பேர் TPV அல்லது SHEV விசாவுடன் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதுஇவ்வாறிருக்க ஆஸ்திரேலியாவில் bridging விசாவுடன் வாழ்ந்துவரும் சுமார் 12 ஆயிரம் பேர் தமக்கான எதிர்காலம் என்ன என கேள்வியெழுப்பியுள்ளனர். TPV மற்றும் SHEV வைத்திருப்பவர்களுக்கான தீர்வு தொடர்பில் அரசு நடவடிக்கை எடுத்துவருகின்றமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள Refugee Action Coalition இன் பேச்சாளர் Ian Rintoul, bridging விசாவிலுள்ளவர்களையும் அரசு கவனத்திலெடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். Bridging விசாவில் உள்ளவர்கள் தொடர்பில் அரசிடம் எதுவித திட்டமும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள Ian Rintoul, TPVகள் மற்றும் SHEV விசாக்களில் உள்ளவர்களுடன் சேர்த்து இவர்களுக்கும் நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAMIL Eelam Eelam b965

ரஷ்ய - உக்ரைன் போர்! - இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் போர் பதற்றம் நீடித்துள்ள நிலையில், இன்று இடம்பெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுகள் எதும் எடுக்கப்படாமல் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இரு நாடுகளும் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாதம் 24ம் திகதி ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து 249 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை நேருக்கு நேர் சந்தித்து பேசுவுதே சிறந்த வழியென உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய இராணுவம் இன்றைய தினம் உக்ரேனிய நகரங்கள் மீது அதன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. பல நகரங்கள் மீது குண்டு தீவிர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் தொடர்கிறது என சர்வதேச ஊடகங்கள் குறிப்பி