யாழில் இப்படியும் ஒரு சம்பவம் - மதுவுக்கு பதிலாக ஓடிக்கொலோனை குடித்து வந்தவரின் உயிர் பிரிந்தது
மதுவுக்கு பதில் ஓடிக்கொலோன்
யாழ்ப்பாணத்தில் மதுபானத்துக்கு பதிலாக ஓடிக்கொலோனை குடித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகக் கொண்ட, மார்க்கண்டு திருக்குமரன் (வயது 54) என்பவரே உயிரிழந்தவராவார்.
யாழில் இப்படியும் ஒரு சம்பவம் - மதுவுக்கு பதிலாக ஓடிக்கொலோனை குடித்து வந்தவரின் உயிர் பிரிந்தது | The One Who Drank Odicolone Was Death
இலங்கையில் பொருளாதார நெருக்கடி
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமன்றி மதுபான வகைகளின் விலைகளும அதிகரித்துள்ளன.இதனால் மதுபானத்தை வாங்க முடியாத காரணத்தால் குறித்த குடும்பஸ்தர் ஓடிக்கொலோனை குடித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் மதியம் இவர் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
யாழில் இப்படியும் ஒரு சம்பவம் - மதுவுக்கு பதிலாக ஓடிக்கொலோனை குடித்து வந்தவரின் உயிர் பிரிந்தது | The One Who Drank Odicolone Was Death
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்