அரசுடன் இணைவதற்கு நடிகைக்கு பேரம் பேசப்பட்ட பெருந்தொகை பணம்
பெரும் தொகை பணம் -பேரம்பேசிய அரசாங்கம்
தம்முடன் இணைந்து கொண்டால் பெரும் தொகை பணம் வழங்கப்படுமென அரசாங்கத்திடம் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டதாக நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.
அவர்களின் மடியில் தான் ஒருபோதும் விழமாட்டேன் என்று அவர்களிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
அரசுடன் இணைவதற்கு நடிகைக்கு பேரம் பேசப்பட்ட பெருந்தொகை பணம் | Negotiated Amount For The Actress
போராட்டத்தின் இலக்கு
ஆனால் நாளைய போராட்டத்தின் இலக்குகளை நிறைவேற்றும் ஒருவருடன் அல்லது ஒரு குழுவுடன் தான் நிற்பேன் என்றார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசுடன் இணைவதற்கு நடிகைக்கு பேரம் பேசப்பட்ட பெருந்தொகை பணம் | Negotiated Amount For The Actress
இதேவேளை அரசாங்கத்திற்கெதிராக ஜூலை மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது, அதிபர் செயலகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பாக நடிகை தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்