முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 35 தங்களின் கலை கலைச்சாரங்களை விதைக்க விரும்பும் வெளிநாட்டவர்கள்,

யாழில் நிகழ்ந்த வித்தியாசமான நிகழ்ச்சி!
யாழில் உள்ள பொது நூலக மண்டபத்தில் ஐரோப்பிய மொழிகள் தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு பன்மொழி ஜாஸ் இசை நிகழ்வு ஒன்று நேற்று (28-09-2022) மாலை இடம்பெற்றது. யாழில் நிகழ்ந்த வித்தியாசமான நிகழ்ச்சி! | Jaffna Different Musical Performance Jazz Music கடந்த செப்டம்பர் 26-ம் திகதியில் நடைபெற்ற ஐரோப்பிய மொழிகள் தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஐரோப்பிய ஒன்றியம் (EU) சுவிட்ஸர்லாந்து தூதரகம், இத்தாலிய தூதரகம், பிரெஞ்சு தூதரகம் அலையன்ஸ் ஃபிரான்சைஸ், கோதே-இன்ஸ்டிட்யூட் மற்றும் பிரிடிஸ் கவுன்சில் (British council) ஆகியவை இணைந்து இலங்கையின் மூன்று முக்கிய நகரங்களில் பன்மொழி ஜாஸ் இசை சுற்றுப்பயணத்தை நடத்தியிருந்தன. அதன் இறுதி நிகழ்வாக யாழ்ப்பாணத்தில் இந்த ஜாஸ் இசை நிகழ்வு இடம்பெற்றுள்ளது. யாழில் நிகழ்ந்த வித்தியாசமான நிகழ்ச்சி! | Jaffna Different Musical Performance Jazz Music சமாதானமிக்க ஒருங்கிணைந்த சமூகமொன்றை நோக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடாத்தப்பட்ட இவ் பன்மொழி ஜாஸ் இசை நிகழ்வு பிரதான, பாப் ராக், ஜாஸ் ஃப்யூஷன், ஜாஸ் பாப் மற்றும் லத்தீன் ஜாஸ் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இடம்பெற்றது. இலங்கை மக்களுடன் மொழியியல் பாரம்பரியத்தின் பன்முகத்தன்மையைப் பகிர்ந்து கொண்டு, கலாச்சாரங்களுக்கு இடையிலான புரிந்துணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இச் சுற்றுப் பயணம் கொழும்பில் ஆரம்பித்து, கண்டிக்கு பயணித்து பின் நேற்று (28) யாழில் நிறைவடைந்தது. யாழில் நிகழ்ந்த வித்தியாசமான நிகழ்ச்சி! | Jaffna Different Musical Performance Jazz Music இதன் ஆரம்ப கச்சேரி கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது. தொடர்ந்து கண்டியில் செப்டம்பர் 26 ஆம் திகதி இடமேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த இசை நிகழ்வில் பாடகர், கிடார் கலைஞர் மற்றும் பாடலாசிரியர் எலியன் அம்ஹெர்ட் மற்றும் Bass இசைக் கலைஞரும், இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான அமண்டா ருஸ்ஸா ஆகியோரின் நிகழ்ச்சிகள் ஜெர்மன், பிரஞ்சு, இத்தாலியன், போர்த்துக்கல் மற்றும் ஆங்கில மொழிகளில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், இலங்கைக்காக சுவிட்சர்லாந்து துணை தூதுவர் மற்றும் சுவிற்சலாந்து தூதரக அதிகாரிகள், யாழ் இந்திய துணை தூதுவர், யாழ் மாநகர மேஜர் மணிவண்ணன் யாழ் மாநகர ஆணையாளர் மற்றும் சிவில் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAMIL Eelam Eelam b965

ரஷ்ய - உக்ரைன் போர்! - இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் போர் பதற்றம் நீடித்துள்ள நிலையில், இன்று இடம்பெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுகள் எதும் எடுக்கப்படாமல் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இரு நாடுகளும் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாதம் 24ம் திகதி ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து 249 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை நேருக்கு நேர் சந்தித்து பேசுவுதே சிறந்த வழியென உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய இராணுவம் இன்றைய தினம் உக்ரேனிய நகரங்கள் மீது அதன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. பல நகரங்கள் மீது குண்டு தீவிர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் தொடர்கிறது என சர்வதேச ஊடகங்கள் குறிப்பி