முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 943 இலங்கையர்களை இலக்கு வைக்கும் வெளிநாட்டவர்கள்

பிலிப்பைன்ஸில் நடுவீதியில் இலங்கை தொழிலதிபர் சுட்டுக்கொலை
இலங்கை தொழிலதிபர் சுட்டுக்கொலை பிலிப்பைன்ஸில் இலங்கை தொழிலதிபர் அடையாளம் தெரியாத ஆயுததாரியால் நடுவீதியில் வைத்து சுட்டு கொல்லப்பட்டுள்ளார். பிலிப்பைன்ஸின் Cotabato நகரத்தில் இன்று (வியாழன்) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்டவர் மகுயிண்டனாவோ மாநிலத்தில் உள்ள Datu Odin Sinsuat நகரின் பரங்காய் செம்பாவில் வசிக்கும் இலங்கை தொழிலதிபரான மொஹமத் ரிஃபார்து மொஹமத் சித்தீக் (46 வயது) (Mohamed Rifard Mohamed Siddeek) என அடையாளம் காணப்பட்டார் என Cotabato City காவல் நிலைய கொமாண்டரான கப்டன் Kenneth Rosales தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸில் நடுவீதியில் இலங்கை தொழிலதிபர் சுட்டுக்கொலை | Sri Lankan Businessman Shot Dead Philippines தாக்குதல் நடத்தியவரை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருவதாக, கோடாபாடோ நகர காவல்துறை பணிப்பாளர் Colonel Querubin Manalang Jr தெரிவித்துள்ளார். சித்தீக் தனது வெள்ளை மினி வானில் பாரங்கே போப்லாசியன் மதர் பகுதியில் உள்ள டான் ருஃபினோ அலோன்சோ அவென்யூ வழியாக வந்து இறங்கியதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த சம்பவம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சிட்டி மெகா மார்க்கெட் அருகே இந்த சம்பவம் நடந்ததாகவும், குற்றம் நடந்த இடத்தில் caliber 45 துப்பாக்கிக்கான வெற்று குண்டுகளை கண்டுபிடித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிலிப்பைன்ஸில் நடுவீதியில் இலங்கை தொழிலதிபர் சுட்டுக்கொலை | Sri Lankan Businessman Shot Dead Philippines துப்பாக்கி ஏந்திய நபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் சென்றதாக காவல்துறையினரின் விசாரணையில் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட தொழிலதிபரை அறிந்த பொதுமக்கள் கூறுகையில், சித்தீக் பணத்தை வட்டிக்கு கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும், கடந்த ஆண்டு Datu Odin Sinsuat நகரின் Barangay Broce என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிர் பிழைத்ததாகவும் தெரிவித்தனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

TAMIL Eelam Eelam b965

ரஷ்ய - உக்ரைன் போர்! - இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் போர் பதற்றம் நீடித்துள்ள நிலையில், இன்று இடம்பெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுகள் எதும் எடுக்கப்படாமல் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இரு நாடுகளும் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாதம் 24ம் திகதி ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து 249 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை நேருக்கு நேர் சந்தித்து பேசுவுதே சிறந்த வழியென உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய இராணுவம் இன்றைய தினம் உக்ரேனிய நகரங்கள் மீது அதன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. பல நகரங்கள் மீது குண்டு தீவிர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் தொடர்கிறது என சர்வதேச ஊடகங்கள் குறிப்பி