இந்தியாவின் நிலைப்பாடு இதுதான் இலங்கையில் உள்ள சிங்களவர்களோ அல்லது தமிழர்களோ பொருளாதாரரீதியாக வளர்ந்துவிடக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது, இந்த உன்மையை இலங்கையில் உள்ள சாதாரண மக்களிற்கு தெரியப்படுத்துவதின் ஊடாக இனங்களிற்கு இடையே ஆன முறன்பாட்டைதீர்க்க முடியும்,
அதன் பின்னர் சமஸ்ட்டி என்ற தீர்வு சாத்தியப்படும என்பதை அனைத்து அரசியல் தலைவர்களும் புரிந்துகொள்ளவேண்டும்,தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு - இந்தியாவின் நிலைப்பாட்டில் தமிழரசுக் கட்சி
அரசியல் தீர்வு என்பது சமஸ்டி கட்டமைப்பிலான அதிகார பகிர்வாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அதிகாரப் பகிர்வையே நாம் ஏற்றுக் கொள்வோம். இந்தியாவும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (18) இடம்பெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஐ.நாவில் இந்தியாவின் கூற்றிலே இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றை கொடுப்பதில் இலங்கை அரசாங்கம் கால இழுத்தடிப்பு ஒன்றை செய்து வருகின்றது என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதிகாரப் பகிர்வு முறை
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு - இந்தியாவின் நிலைப்பாட்டில் தமிழரசுக் கட்சி | Political Solution Tamil People India Tna
13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது உள்ளடங்கலாக அதிகாரப் பகிர்வு முறை செய்யப்பட வேண்டும் என்று தான் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
13 ஆம் திருத்தச் சட்டத்துடன் இந்த விடயம் நிறைவுக்கு வருகிறது என அவர்கள் சொல்லவில்லை. ஆகவே அந்த நிலைப்பாடு நல்ல நிலைப்பாடு. முதல் படியாக 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுவத்துவதாக இருந்தாலும் அதனைச் செய்யட்டும். ஆனால் அது தீர்வல்ல.
அரசியல் தீர்வு என்பது சமஸ்டி கட்டமைப்பிலான அதிகார பகிர்வாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அதிகார பகிர்வையே ஏற்றுக் கொள்வோம். இந்தியாவும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது.
ஐ.நா தீர்மானம்
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு - இந்தியாவின் நிலைப்பாட்டில் தமிழரசுக் கட்சி | Political Solution Tamil People India Tna
ஐ.நாவில் நிறைவேற்றப்படப் போகும் தீர்மானங்கள் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை நான் பேசியுள்ளேன். அதில் என்ன மாற்றம் தேவை என தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் அதனை நிறைவேற்றப் போகிறவர்கள் இணை அணுசரணை நாடுகள். அவர்கள தான் இறுதியில் அதில் வேறு எதனையும் சேர்த்துக் கொள்ளலாமா, இதைப் பலப்படுத்தலாமா, அப்படிச் செய்தால் வாக்குகள் கூடுமா, குறையுமா என்கின்ற கடைசி தீர்மானங்களை எடுப்பார்கள். ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள வரைபு ஓரளவு எல்லா விடயங்களையும் அணுகுகின்ற ஒரு வரைபாக உள்ளது. அது இன்னும் பலமூட்டப்பட வேண்டும் எனக் கோரியுள்ளோம்.
எல்லோருடைய கருத்துகளையும் உள்வாங்கியுள்ளார்கள். ஏனைய நாடுகளுடன் பேசி முடிவு எடுப்பார்கள். கூட்டத்தின் இறுதி நாட்களில் வாக்கெடுப்பு நடைபெறும்” என்றார்.
e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?
துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு, By Gokulan 2 மணி நேரம் முன் 0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந
கருத்துகள்