யாழ்ப்பாணத்தில் 17 வயதான சிறுமியை காணவில்லை!
யாழ்ப்பாணத்தில் 17 வயதான சிறுமியை காணவில்லை என தெரிவித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு கொட்டி சுட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மதிவதணன் லக்சாயினி எனும் சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த சிறுமி நாடகமும், அரங்கியலும் செயன்முறை பரீட்சைக்கு பாடசாலை சென்ற நிலையில் கடந்த புதன்கிழமை (21-09-2022) இருந்து வீடு திரும்பவில்லை என தெரிவித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை வட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.தமிழர்கள் கடத்தப்பட்டு அவர்களின் உடல் உறுப்புக்கள் உயர்ந்த விலையில் வெளிநாடுகளிற்கு விக்கப்படுவதை பல முறை தெரிவித்துள்ளேன், அவதானமாகயிருக்கவும்,
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்