மன்னார் நொச்சிக்குளம் இரட்டை படுகொலை சம்பவம் தொடர்பில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை (30-09-2022) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த 20 சந்தேக நபர்களும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (16-09-2022) மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது குறித்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மன்னாரை உலுக்கிய கொடூர சம்பவம்: சந்தேக நபர்களுக்கு நேர்ந்த கதி! | Mannar Double Murder20 Suspects Remanded
மேலும் சம்பவ இடத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட சான்று பொருட்களான இரத்த மாதிரி, இரண்டு கோடாரிகளை பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்ப பொலிஸாரினால் மன்றில் அனுமதி கோரிய போது மன்றினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
இதன் போது பொலிஸ் அதிகாரி ஒருவரை நியமித்து, குறித்த சான்று பொருட்களையும் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்ப நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
மன்னாரை உலுக்கிய கொடூர சம்பவம்: சந்தேக நபர்களுக்கு நேர்ந்த கதி! | Mannar Double Murder20 Suspects Remanded
இந்த நிலையில் சந்தேக நபர்கள் 20 பேரையும் இம்மாதம் 30-ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி மன்னார் நொச்சிக்குளத்தில் இடம்பெற்ற சம்பவத்தில், உயிலங்குளம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
மன்னாரை உலுக்கிய கொடூர சம்பவம்: சந்தேக நபர்களுக்கு நேர்ந்த கதி! | Mannar Double Murder20 Suspects Remanded
இந்த சம்பவம் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் உயிலங்குளம், மற்றும் தலை மன்னார் பொலிஸ் உத்தியோகத்தர்கள், மன்னார் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்