தேசியக் கொடியுடன் வீதிகளுக்கு வருமாறு நாட்டு மக்களிடம் ஜனாதிபதி கோரிக்க
2022ஆம் ஆண்டுக்கான் ஆசியக்கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியும், 2022ஆம் ஆண்டுக்கான ஆசிய வலைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் வலைப்பந்தாட்ட அணியும் நாளை (13) நாடு திரும்பவுள்ளது.
,இன்று, காலை 6 மணியளவில் குறித்த இரு குழாமினரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாகன பேரணியாக அழைத்து வரப்படவுள்ளனர்.
ஜனாதிபதியின் கோரிக்கை
தேசியக் கொடியுடன் வீதிகளுக்கு வருமாறு நாட்டு மக்களிடம் ஜனாதிபதி கோரிக்கை | Asia Cup2022 Final Sri Lanka People Today Ranil
இந்நிலையில், தாய்நாட்டை ஆசியாவின் உச்சியில் உயர்த்தி சர்வதேசப் புகழ் பெற்ற விளையாட்டு வீர, வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி வரவேற்க தேசியக் கொடியுடன் பிரதான வீதிகளுக்கு வருமாறு பொது மக்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து இலங்கை காவல்துறையினரால் வாகன அணிவகுப்பில் வீரர்கள் அணிவகுத்து கொழும்புக்கு அழைத்து வரப்படுவார்கள்.
இந்த வாகன அணிவகுப்பு கொழும்பு - நீர்கொழும்பு வீதி வழியாக இலங்கை கிரிக்கெட் தலைமை அலுவலகம், மிட்லாண்ட் பிளேஸ், கொழும்பு 07 மற்றும் கொழும்பு 07 டொரிங்டன் சதுக்கம் என்பவற்றின் ஊடாக விளையாட்டு அமைச்சின் வளாகத்திலுள்ள வலைப்பந்து சம்மேளன தலைமையகத்தை சென்றடையும்.
இந்த வாகன அணிவகுப்பு கட்டுநாயக்க விமான தளத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு முற்பகல்; 9 மணிக்கு கொழும்பு அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற 2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணியை வெற்றிக்கொண்டிருந்தது.
தேசியக் கொடியுடன் வீதிகளுக்கு வருமாறு நாட்டு மக்களிடம் ஜனாதிபதி கோரிக்கை | Asia Cup2022 Final Sri Lanka People Today Ranil
வலைப்பந்தாட்ட இறுதிப்போட்டி
இதன்மூலம் இலங்கை அணி 6 தடவைகள் ஆசியக்கிண்ணத்தினை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசியக் கொடியுடன் வீதிகளுக்கு வருமாறு நாட்டு மக்களிடம் ஜனாதிபதி கோரிக்கை | Asia Cup2022 Final Sri Lanka People Today Ranil
அத்துடன், சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற வலைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் இலங்கை வலைப்பந்தாட்ட மகளிர் அணி 63:53 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றிருந்தது.
e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?
துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு, By Gokulan 2 மணி நேரம் முன் 0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந
கருத்துகள்