முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 956 திலீபன்தாகம் தீரவில்லை

திலீபன் போராட்ட காலத்தில் தனியே ஆயுதம் ஏந்திய போராளியாக மட்டும் நிலைபெறவில்லை.
அந்நேரத்தில் ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும் கடமையாற்றியிருந்தார். ‘களத்தில்’ என்பதுதான் அந்தப் பத்திரிகையின் பெயர். விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்திலிருந்து எண்பதுகளில் வெளியிடப்பட்டது. அதன் ஆசிரியராக திலீபன் பணியாற்றினார். யாழ்ப்பாணக் கோட்டை இதே நாளில் விடுதலைப் புலிகளிடம் வீழ்ந்தது எப்படி? தமிழர் உரிமைப் போராட்ட வரலாற்றில் “களத்தில் பிரகடனம்” ஒரு முக்கியமான பதிவாகும். அதாவது அந்த நேரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் ஜே.ஆர் அரசுக்கும் இடையில் நிகழந்த பேச்சுவார்த்தைகளின்போது மாகாண சபை உருவாக்கம் சம்மந்தமான விடயங்கள் பேசப்பட்டன. அவற்றை புலிகள் மறுப்பதாக ஒரு பிரகடனம் களத்தில் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் திலீபன் எழுதியிருந்தார். “சுதந்திர தமிழீழம் தவிர்ந்த வேறெந்த தீர்வும் இனி எங்கள் அரசியல் அகராதியில் கிடையாது.” என்பதே. புலிகளின் குரலாய் திலீபன் எழுதிய இந்த பிரகடனம்தான் பின்வந்த போராட்ட காலங்களில் தனி நாட்டுக்கான முழு வீச்சுப்பெற்ற தாக்குதல் அணிகளைக் கட்டமைக்கும் மூலோபாயங்களைக் கொடுத்தது. அந்த வகையில் திலீபனின் “களத்தில் பிரகடனம்” சிறப்பு வாய்ந்ததெனலாம். அன்றைய நாட்களில் யாழ்ப்பாணக் கோட்டை படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது யாழ் நகரமே குண்டு மழையால் சிதைந்துகொண்டிருந்தது. கோட்டைக்கு வெளியில் வந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் இராணுவம் சுட்டுத் தள்ளியது. இதன்போதுதான் கோட்டை இராணுவ முகாம் அழிக்கப்படவேண்டும் என்ற தேவை உணரப்பட்டு கோட்டை மீதான முற்றுகைச் சமர் தளபதி கேணல் கிட்டு தலைமையில் ஆரம்பமானது. யாழ்ப்பாணக் கோட்டை போரியல் அடிப்படையில் முற்றுகைக் கென்று பெயர்போன ஒரு கோட்டையாகும். முதன் முதலில் போர்த்துக்கேயர்களை முற்றுகையிட்ட ஒல்லாந்தர் அவர்களை நிர்வாணப்படுத்தியே வெளியேற்றினர். பின்னர் ஒல்லாந்தரை முற்றுகையிட்ட ஆங்கிலேயர் அவர்களது ஆயுதங்கள் அனைத்தையும் பிடுங்கிவிட்டே வெளியேற்றி அதன்பின் கோட்டை இலங்கை இராணுவத்தின் கைகளில் வந்தது. யாழ்ப்பாணக் கோட்டையின் அமைவிடம் என்பது நன்கு திட்டமிட்ட ஒன்றாகும். மூன்று பக்கம் நிலத்தாலும் ஒரு பக்கம் கடலாலும் சூழப்பெற்றது. முற்றுகை ஒன்று வரும்போது கடல் மார்க்கமாகத் தப்பி விடுவதே நோக்கம். கிட்டு தலைமையில் கோட்டை முற்றுகையிடப்பட்டபோது கடல்மார்க்கத்தை தடை செய்யவில்லை. (முன்னைய முற்றுகைகளில் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் நாற்புறங்களையும் தடைசெய்தே முற்றுகையிட்டனர்.) அப்போது கோட்டை இராணுவ முகாமின் தளபதியாக இருந்தவர் கப்டன் கொத்தலாவல. கோட்டை நிலப்பக்கத்தால் மூடப்பட்டாலும் கடல்மார்க்கமான தொடர்பு இராணுவத்திற்கு இருந்தது. ஆனால் அது திருப்திகரமானதாக இருக்கவில்லை. இது இராணுவத்தினரை உளவியல் ரீதியில் பெரும் தாக்கத்திற்கு உட்படுத்தியிருந்தது. கோட்டை முற்றுகை என்பது கோட்டை இராணுவ முகாமைக் கப்பற்றும் நோக்கத்தோடு தொடுக்கப்பட்டதல்ல. அங்கிருந்த இராணுவத்தின் வெளிப் பிரசன்னத்தை அடக்குவதேயாகும். கேணல் கிட்டு ஓர் சிறந்த தொடர்பாடல் திறனுள்ள தளபதி என்பதற்கு எடுத்துக்காட்டு கோட்டை இராணுவ முகாமின் தளபதி கொத்தலாவலக்கும் கிட்டுவுக்கும் இடையில் நிகழ்ந்துவந்த கைதிகள், சடலங்கள் பரிமாற்றம்தான். ஒருபக்கம் பரஸ்பரம் தாக்குதல்களில் ஈடுபட்டாலும் இரு பக்கத் தளபதிகளும் கைலாகு கொடுத்துவந்தனர். இது நிகழ்ந்தது கோட்டைக்கு வெளியே முற்றவெளியிலாகும். கப்டன் கொத்தலாவல புலிகள்மீது நம்பிக்கை வைத்து துணிவோடும் வெளியே வந்து கிட்டுவோடு கைலாகு செய்வது கிட்டு மீது கொண்ட நம்பிக்கையின் மூலமே. இந்த சந்திப்புக்கள் நிகழ்ந்தமை இலங்கை மக்கள் கட்சியின் தலைவர் விஜயகுமாரணதுங்கவின் (சந்திரிகாவின் கணவர்) யாழ்ப்பாண கோட்டை விஜயத்தினையடுத்தேயாகும். கோட்டை முற்றுகையின் பின்னரும் இராணுவத்தின் ஷெல்மழை அச்சுறுத்திக்கொண்டுதான் இருந்தது யாழ் நகரை. திலீபன் உண்ணாவிரத மேடையில் கோட்டை அழித்துக் கைப்பற்றப்படவேண்டும் அங்கு எமது படை நிலைகொள்ள வேண்டும் என்று உரையாற்றினார். மாறி மாறி அந்நியர்களால் ஆளப்பட்ட யாழ் கோட்டையில் என்று புலிக்கொடி பறக்குதோ அன்றுதான் எம் தேசத்தின் விடியல் பயணமும் ஆரம்பமாகும் என்ற ஆழமான சிந்தனையை முன்வைத்தார். திலீபனின் மறைவுக்குப் பின்னர் 1990 மே மாதமளவில் தலைவர் பிரபாகரனின் உத்தரவின்பேரில் யாழ் மாவட்டத் தளபதி பானு தலைமையில் கோட்டை மீதான அழித்தொழிப்பு நடவடிக்கை ஆரம்பமாகியது. புலிகளின் சுய தயாரிப்பு பீரங்கியான பசீலன்-2000 என்ற ஐம்பது கிலோ எடைகொண்ட குண்டுகள் கோட்டை மதில்களைத் தகர்த்துக்கொண்டிருந்தமை கண்டு முகாமில் இருந்த இராணுவம் கதிகலங்கிப் போனது. கிட்டுவின் முற்றுகை போலவே பானுவின் முற்றுகையும் அமைந்தது. கடல் மார்க்கம் திறந்துவிடப்பட்டது. தொடர்ந்து நான்கு மாதம் நடந்த முற்றுகையினைத் தொடர்ந்து கடல் மார்க்கமாக தப்பியோடியது இலங்கை இராணுவம். கோட்டை புலிகள் வசம் வீழ்ந்தது. திலீபனின் கனவை தளபதி பானு நிறைவேற்றி வைத்தார். கோட்டையில் புலிக்கொடி பட்டொளி வீசிப் பறந்தது; அதுவும் திலீபன் ஈகையாகிப்போன இதே நாளில்! பார்த்திபன் இன்னும் பசியுடன் தான் இருக்கிறான். .. Related

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?