முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 428 எதிர்மாறான சில விடயங்கள் நடப்பதாலே மனிதர்கள் கடவுளை நம்புகின்றார்கள்,

கணவன் விட்டுப்பிரிந்த ஆத்திரம் மனைவிக்கு அடித்த ஜாக்பொட் பரிசு
தனது நெருங்கிய தோழியுடன் கணவன் கைவிட்டு சென்ற கடும் கோபத்தில் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பை வாங்கிய பெண்ணுக்கு பெருந்தொகை பணம் கிடைத்து அவரது கோபத்தை தணிய வைத்துள்ளதுடன் பணமின்றி பொருளாதார ரீதியாக பெரும் கஷ்டத்தில் இருந்த அவருக்கு பெரும் ஆறுதலையும் அளித்துள்ளது. கொலம்பியாவின் பாரன்குவிலா பகுதியை சேர்ந்த பெயர் குறிப்பிடாத பெண்ணுக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது. இக்கட்டான சூழலில் அடித்த அதிஷ்டம் கணவன் விட்டுப்பிரிந்த ஆத்திரம் மனைவிக்கு அடித்த ஜாக்பொட் பரிசு | Husband S Separation Anger Is A Jackpot Prize Wife கணவன் விட்டு பிரிந்த நிலையில் இக்கட்டான சூழலில் தங்கியிருந்த வீட்டையும் இழக்க நேர்ந்துள்ளது.இந்த நிலையில் இரண்டு அதிஷ்ட இலாப சீட்டை வாங்கிய அவர் இரண்டில் இருந்தும் சுமார் 268,000 பவுண்டுகளை பரிசாக வென்றுள்ளார். இந்த கொண்டாட்டத்தின் நடுவே, தமது முன்னாள் கணவன் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தியதாகவும், எனினும் அவரின் வாழ்த்துகளுக்கு நன்றியை மட்டும் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கணவர் கைவிட்டு சென்ற ஓராண்டு நிறைவு கணவன் விட்டுப்பிரிந்த ஆத்திரம் மனைவிக்கு அடித்த ஜாக்பொட் பரிசு | Husband S Separation Anger Is A Jackpot Prize Wife அதிஷ்ட இலாபத்தில் பெருந்தொகை வென்றுள்ள நிலையில்,கல்வி கட்டணங்களை செலுத்த முடியாத சூழலில் இருந்த மகள் தற்போது பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து கற்கும் வாய்ப்பும் அமைந்துள்ளது. ஜனவரி 17ம் திகதி சீட்டை வாங்கிய அந்த நாள், தற்செயலாக தமது கணவர் கைவிட்டு சென்றதன் ஓராண்டு நிறைவு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சராசரியாக மாதம் 800 பவுண்டுகள் ஊதியமாக பெறும் மக்கள் வசிக்கும் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், குறித்த பெண்ணுக்கு கிடைத்த பரிசுத் தொகையானது மிகப்பெரிய ஜாக்பொட் என கூறப்படுகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news b890

போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் ​சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.