இதைதிட்டமிட்ட பல்கலைகலக மாணவர்களிற்கு எமது பாராட்டுக்கள்,
தமிழர் தேசமே எழுந்துவா - கரிநாளாகும் சுதந்திரதினம்..! பாரிய மக்கள் பேரணி
'வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி தமிழர் தேசமே எழுந்துவா' என்ற கருப்பொருளில் இலங்கையின் சுதந்திர நாளான பெப்ரவரி 4 ஆம் திகதி கரிநாள் பேரணி இடம்பெறவுள்ளது.
வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகும் இந்த பேரணி மட்டக்களப்பில் 7ஆம் திகதி நிறைவுறும்.
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைக்காக பல்கலை மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தப் பேரணி ஒழுங்கமைக்கப்படவுள்ளது.
பேரணிக்கான ஆதரவு கோரி சிவில் சமூகத்தினர், மாணவர்கள், மதத் தலைவர்கள், பல தரப்பட்டவர்களையும் மாணவர் ஒன்றியத்தினர் மாவட்டம் தோறும் சந்தித்து வருகின்றனர்.
பேரணி ஒழுங்கமைப்பு விபரம்
தமிழர் தேசமே எழுந்துவா - கரிநாளாகும் சுதந்திரதினம்..! பாரிய மக்கள் பேரணி | Sri Lanka Independence Day Protest 2023
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலிலிருந்து ஆரம்பமாகி கிளிநொச்சி வரையில் முதல் நாள் பேரணி நடைபெறும்.
மறுநாள் 5ஆம் திகதி கிளிநொச்சியிலிருந்து பேரணி ஆரம்பமாகி மாங்குளம் சந்தியைச் சென்றடையும்.
அதேநேரம் மன்னார் மற்றும் வவுனியாவிலிருந்து புறப்படும் பேரணிகளும் மாங்குளம் சந்தியை வந்தடையவுள்ளன.
சகல பேரணிகளும் ஒன்றிணைந்து அங்கிருந்து புறப்பட்டு முல்லைத்தீவில் இரண்டாம் நாளை நிறைவு செய்யும்.
மூன்றாம் நாள் - பெப்ரவரி 6ஆம் திகதி - முல்லைத்தீவிலிருந்து புறப்படும் பேரணி, தமிழர் தாயகத்தின் சிங்கள ஆக்கிரமிப்பு பிரதேசமான தென்னமரமாவடி ஊடாகச் சென்று திருகோணமலையைச் சென்றடையும்.
நான்காவது இறுதி நாளுமான பெப்ரவரி 7ஆம் திகதி திருகோணமலையிலிருந்து புறப்படும் பேரணி மட்டக்களப்பு காந்தி பூங்காவைச் சென்றடைந்து அங்கு நிறைவடையும்.
இதன்போது அம்பாறை மாவட்டத்திலிருந்து புறப்படும் பேரணியும் அங்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?
துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு, By Gokulan 2 மணி நேரம் முன் 0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந
கருத்துகள்