முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 410 தனிநாடு வைத்துயிருப்பவர்களிற்கு மேலதிகமான ஆசைகளையும் தான் நிறைவேற்றப்போவதாக புடின் தெரிவித்தார்,

உலகத்தின் தலைவிதி - இறுதி ஆயுதம் அணு யுத்தமே: புடின் அதிரடி
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார். அதை எதிர்த்து ரஸ்யா போரை தொடங்கியது. கடந்த பெப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஸ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன. இந்தப் போர் இன்னனும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அமெரிக்கா - பிரிட்டன் ஆதரவு உலகத்தின் தலைவிதி - இறுதி ஆயுதம் அணு யுத்தமே: புடின் அதிரடி | Putin Warns Nuclear War If Russia Defeated Ukraine உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. ரஸ்யா படையெடுப்புக்கு பிறகு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடந்த டிசம்பர் 21ம் திகதி அமெரிக்கா சென்றார். அமெரிக்க அதிபர் ஜோ பிடனைச் சந்தித்து, உக்ரைனுக்கு அதிக ஆயுதம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து உக்ரைனுக்கு 3 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ படையில் உக்ரைன் கண்டிப்பாக இணையும் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்தார். ஆனால் உக்ரைனில் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் நேர்மறையான பலன்களை தருவதாக ரஸ்ய அதிபர் புடின் தெரிவித்தார். நியோ நாஜிக்களை அழிப்பதே நோக்கம் உலகத்தின் தலைவிதி - இறுதி ஆயுதம் அணு யுத்தமே: புடின் அதிரடி | Putin Warns Nuclear War If Russia Defeated Ukraine அதைத் தொடர்ந்து ரஸ்ய படைகள் உருவான 80வது ஆண்டு விழாவில் பங்கேற்ற அதிபர் புடின் கூறும்போது, ‘‘உக்ரைன் போரில் வெற்றி நிச்சயம். துளியும் சந்தேகம் வேண்டாம். ரஷ்ய மக்களின் ஒற்றுமை மற்றும் வேண்டியதில் நிலைத்தல் ஆகிய குணாதிசயங்களால் இந்த வெற்றி சாத்தியமாகும். நமது வீரர்களின் சிறப்பான செயல்பாடுகள் அதற்கான பலன்களை கொடுக்கும். உக்ரைனில் உள்ள நியோ நாஜிக்களை அழிப்பதே நமது நோக்கம். ஹிட்லரின் நாஜிப்படைகளின் தற்போதைய வடிவம் தான் நியோ நாஜிக்கள். இன வெறியர்களான அவர்கள் நசுக்கப்பட வேண்டும். சர்வாதிகாரி மற்றும் யூத மக்களை கொன்று குவித்து உலகத்தையே ஆட்டிப்படைக்க நினைத்த ஹிட்லரின் நாஜிப்படைகளை நாம் ரஸ்யர்கள் அழித்ததை போல், இந்த நாஜிக்களும் ஒடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன்’’ என அவர் தெரிவித்தார். அணு ஆயுத போர் உலகத்தின் தலைவிதி - இறுதி ஆயுதம் அணு யுத்தமே: புடின் அதிரடி | Putin Warns Nuclear War If Russia Defeated Ukraine இந்தநிலையில் அணு ஆயுத போர் உருவாக வாய்ப்புள்ளதாக ரஸ்ய முன்னாள் அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஸ்யாவின் ராணுவ நடவடிக்கையை குறிப்பிடும் வகையில், "வழக்கமான போரில் தோல்வி அணு ஆயுதப் போரைத் தூண்டலாம்" என்று ரஷ்ய முன்னாள் அதிபர் மெட்வடேவ் இன்று கூறினார். ஒரு வேளை ரஸ்யா தோற்கடிக்கப்பட்டால், அணு ஆயுதப் போர் உருவாக சாத்தியம் உள்ளது. அதற்கு பின் இந்த உலகத்தின் தலைவிதி எவ்வாறு இருக்கும் என்பது கணிக்க முடியாதது என அவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news b890

போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் ​சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.